google 3d animals, how to watch google 3d animals, google 3d animals view in 3d, google ar animals, கூகுள் அனிமல்ஸ் 3டி ஆப்
Google 3D Animals App: பொழுதுபோக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் வீட்டில் உட்கார்ந்து மக்கள் பல்வேறு வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். Streaming platforms ஆகிய Netflix, Amazon Prime Video மற்றும் பலவற்றில், சிலர் புதிய நிக்ழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் கண்டுகளிக்கின்றனர். Houseparty, TikTok போன்ற ஆப்கள் மற்றும் விளையாட்டுகளில் சிலர் தங்களை சேர்த்துக் கொள்கின்றனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மற்றொரு தரப்பு மக்கள் Google’s 3D விலங்குகள் அம்சத்தை (animals feature) தேடல்களுக்கு முயற்சித்துப் பார்கின்றனர். கடந்த வருடம் நடைப்பெற்ற I/O developers சந்திப்பின் போது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இதை அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட் கைபேசியை பயன்படுத்தி, நாங்கள் முன்பு 3D விலங்குகளான புலி, சிங்கம், பாண்டா மற்றும் பலவற்றை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை விளக்கியிருந்தோம். சிலரால் 3D விலங்குகளை தங்கள் அறைகளில் உள்ளே பார்க்க முடிந்தது. ஆனால் வேறு சிலரால் அதை பார்க்க முடியவில்லை.
Advertisment
Advertisements
ஏனென்றால் இந்த அம்சம் எல்லா கைபேசிகளிலும் பொருந்தாது என்பதால் தான். ஏறக்குறைய எல்லா கைபேசிகளும் ‘View in 3D’ செயல்பாட்டை ஆதரிக்கும் அதே வேளையில், ‘view in your space’ AR அம்சத்துக்கு வரும் போது சிக்கல் ஏற்படுகிறது. உங்கள் அறையில் AR விலங்குகளை காண்பிக்க உங்கள் கைபேசி கூகுளின் ARCore அம்சத்தை ஆதரிக்க வேண்டும்
சமீபத்திய iOS மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசி பயனர்களில் பெரும்பாலானவர்கள் இந்த சிக்கலை எதிர்கொள்ளமாட்டார்கள்.
google 3D animals AR App in google play services: கூகுள் அனிமல்ஸ் 3டி ஆப்
உங்கள் கைபேசி கூகுளின் ARCore ஐ ஆதரிக்குமா எனப்தை தெரிந்துக் கொள்ள Google Play Services for AR app உங்கள் கைபேசியில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளவும். நிறுவப்படவில்லை என்றால் கூகுள் Play Store க்கு சென்று AR app’ன் சமீபத்திய பதிப்பை புதுப்பித்துக் கொள்ளவும் (current version 1.16).
உங்களுடைய கைபேசி ARCore ஐ ஆதரித்தாலும் கூகுள் 3D விலங்குகள் அம்சம் (Google 3D animals feature) வேலை செய்யவில்லை என்றால் உங்கள் கைபேசியில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உங்கள் கைபேசியை reboot செய்வது சிறந்தது. நீங்கள் உங்கள் கைபேசியை ஒரு முறை சிவிட்ச் ஆப் செய்து விட்டு திரும்பவும் சிவிட்ச் ஆன் செய்தும் பார்க்கலாம்.
எவ்வாறு AR animals ஐ பார்ப்பது.
முதலில் பார்க்க வேண்டிய விலங்கின் பெயரை கூகுளில் உள்ளீடு செய்யவும். அடுத்து scroll down செய்து “View in 3D” தேர்வை சொடுக்கவும்.
அடுத்து நீங்கள் உங்கள் கைபேசியை அறையின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சிங்கத்தின் ஒளி நிழலை காண முடியும்.
இப்போது நீங்கள் AR சிங்கத்தை உங்கள் கைபேசியில் காணமுடியும். நீங்கள் சிங்கத்தை zoom in and out செய்து அதை நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil