வெளி நாடுகளுக்கு செல்ல மொழி தான் பிரச்சனையா? உங்களுக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பேசும்
Google Simultaneous Translation : கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிஸ்பிளேக்கள், ஸ்மார்ட் க்ளாக்குகள் மற்றும் டேப்ளட்களில் இந்த சேவையை 44 உலக மொழிகளில் வழங்கி வருகிறது கூகுள்.
Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking
Google Assistant Interpreter Mode Real-Time Translation : இப்போ நீங்க வேறொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் போறீங்கன்னு வச்சுக்குவோம். உதாரணமா கிரீஸ்க்கு போறீங்கன்னு வச்சுக்குவோம். ஆனா உங்களுக்கு கிரீக் மொழி தெரியாது. நாம என்ன பேசுறோம்னு அவங்களுக்கு புரியாது. அவங்க என்ன சொல்றாங்கன்னு நமக்கும் தெரியாது. இப்படியே இருந்தா அந்த ட்ரிப் எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. டாக்ஸில தொடங்கி, ஹோட்டல், ரெஸ்டாரண்ட்ன்னு எல்லா இடத்துலையும் தேவையில்லாத குழப்பம் வரும். இந்த உலகத்துல பேசுற எல்லா மொழியையும் எப்பிடி ஒரு மனுசனால புரிஞ்சுக்க முடியும். கஷ்டம் தான?
Advertisment
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
நம்மோட கஷ்டத்தை நல்லா புரிஞ்சுக்கிட்ட கூகுள் புதுசா ஒரு வழியை கண்டுபிடிச்சுச்சு. இந்த ஆண்டுக்கான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவின் போது ஸ்மார்ட் டிஸ்பிளேக்களில் மட்டும் இயங்கும் கூகுள் அசிஸ்டெண்ட் இண்டெர்ப்ரெட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.. நாம் பேசும் மொழியை அது மொழி பெயர்த்து மற்ற நாட்டினரிடம் கூறும். அவர்கள் பேசும் மொழியை நம் மொழியில் மாற்றி நமக்கு அறிவிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த வசதியை கூகுள் ஆண்ட்ராய்ட் போன்களிலும் உருவாக்கியுள்ளது. இது ஒரே நேரத்தில் இருவர் பேசும் மொழியையும் மொழி பெயர்த்து கூறும் என்பதால் இனி கவலையே இல்லாமல் நீங்கள் பயணிக்கலாம்.
Advertisment
Advertisements
இதனை எப்படி பயன்படுத்துவது?
கூகுள் அசிஸ்டெண்ட் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு தான் வெளியாகிறது. ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முதலில் கூகுள் அசிஸ்டெண்ட்டை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஓகே கூகுள் கூறிய பின்பு கூகுள் ட்ரான்ஸ்லேசன் ப்ரோசஸ் துவங்கும். பின்னர் நீங்கள் “Be my Italian interpreter” அல்லது “Help me speak Spanish”அல்லது “Turn on interpreter mode” போன்ற கட்டளைகளை உங்கள் மொழித் தேவைக்கு ஏற்ற வகையில் கூறுங்கள்.
பின்பு இண்டெர்பிரெட்டர் ஆன் ஆகிய பிறகு ஏதேனும் ஒரு மொழியில் நீங்க பேச துவங்கினால் தானாக கூகுள் அதனை மொழி பெயர்த்து உச்சரிக்கும்.
நீங்கள் பேசும் மொழியை கூகுள் அசிஸ்டெண்ட் தானாக அடையாளம் கண்டு இண்டெர்பிரெட் செய்ய ஆரம்பித்துவிடும்.
ட்ரான்ஸ்லேசன் முடிந்தவுடன் ஸ்டாப், க்விட், அல்லது எக்ஸிட் போன்ற கட்டளை பிறப்பித்துக் கொள்ளுங்கள்.
கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிஸ்பிளேக்கள், ஸ்மார்ட் க்ளாக்குகள் மற்றும் டேப்ளட்களில் இந்த சேவையை 44 உலக மொழிகளில் வழங்கி வருகிறது கூகுள்.