Google : நமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் ஒரே இடம் கூகுள்தான். அப்படிபட்ட கூகுள் நிறுவனம் 21ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும், உலகின் சரித்திர நாயகர்களின் பிறந்த நாளையும், தனது கூகுள் டூடுள் பக்கத்தின் மூலம் கொண்டாடும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
Advertisment
அனிமேஷன் மூலம் ஒவ்வொரு டூடில் பக்கத்தின் வடிவமைப்பையும் உருவாக்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளிற்கும் ஒரு அனிமேஷனை செய்துள்ளது.மக்களின் அனைத்து தேடல்களுக்கும் தீர்வளிக்கக் கூடிய ஒரே ’சர்ஜ் இன்ஜின்’ உருவாக்கும் வகையில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினர்.1க்கு பின் 100 பூஜ்யங்களைக் குறிக்கும், கூகால் என்ற கணித வாா்த்தையைச் சாா்ந்து கூகுள் என்ற பெயர் அந்த நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது.
ஒரே ஒரு சேவையுடன் தொடங்கிய கூகுளிடம் இப்போது பல சேவைகள் உள்ளன. உலகம் முழுவதும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் 60 நாடுகளில் கால் பதித்து பரந்து விரிந்திருக்கிறது கூகுள்.ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப, தன்னை அப்டேட் செய்து கொண்ட கூகுள், கடந்த 2001ஆம் ஆண்டு தனது தொழில்நுட்பத்திற்காக காப்புரிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிறந்த நாளில் குழப்பம்: கடந்த 2005ஆம் ஆண்டு வரை செப்டம்பர் 7ஆம் தேதி கூகுளின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பின்பு செப்டம்படர் 8 மாறி 26 என மாறி கடைசியில் ஒரு வழியாக கூகுள் பிறந்த நாள் செப்டம்பர் 27 ஆம் தேதி என உறுதியாகியுள்ளது.