ஜிமெயிலில் கூகுளின் ‘ஹெல்ப் மீ ரைட்’ அம்சம் இப்போது வெப்-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜெமினி ஏ.ஐ-ஐப் பயன்படுத்தி ஜிமெயில் எழுதவும் உங்கள் மெயிலை மேம்படுத்தவும் உதவும்.
பயனர்கள் ஜிமெயில் ஓபன் செய்யும் போது புதிய மெயில் எழுதும் போது இந்த புதிய ஏ.ஐ வசதி ப்ராம்ட் செய்யப்படும். இருப்பினும், இந்த அம்சம் இப்போது Google One AI பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மற்றும்ஜெமினி ஆட்-ஆன் வெர்க்ஸ்பேஸ் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் உள்ளது.
ஜிமெயில் மட்டுமல்லாது நீங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலை திருத்துவது, மேம்படுத்தவது போன்ற வசதிகளை வழங்குகிறது. அதோடு இந்த அம்சத்தில் ‘polish’ என்ற ஆப்ஷனும் உள்ளது. இது 12 வார்த்தைகள் டைப் செய்யப்பட்ட drafts பக்கத்தில் காண்பிக்கும். Shortcut ஆப்ஷனை கிளிக் செய்து அல்லது CTRL+H என கிளிக் செய்து drafts மெயிலை மேம்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“