சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு...
அரசியல் ரீதியான பாகுபாடுகள் கூகுள் சர்ச்சில் கிடையாது என விளக்கம்...
Google CEO Sundar Pichai : கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை நேற்று நடைபெற்ற யூ.எஸ். காங்கிரஸ்னல் பேனலில் (US congressional panel) “சீனாவில் புதிய சர்ச் எஞ்சின் எதையும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை” என்பதை கூறியிருக்கிறார். இனிமேல் அப்படி ஒன்றினை உருவாக்கும் எண்ணம் இல்லை என்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்.
2010ம் ஆண்டில் இருந்து சீனாவில் கூகுளின் மெயின் சர்ச் எஞ்சினை முடக்கியுள்ளது. சீனாவில் கூகுளை மீண்டும் இயக்கினால் அது பல்வேறு சேவைகளுக்கும் வளர்ச்சிகளுக்கும் வித்திடும் என்பது கூகுள் நிர்வாகிகளின் கருத்து.
Google CEO Sundar Pichai மீது குற்றச்சாட்டுகள்
சீனாவில் புதிய சர்ச் இஞ்சின் அமைப்பது, அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்வது போன்று கூகுள் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நேற்று அமெரிக்காவின் நாடாளுமன்ற விசாரணைக் குழு, கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையிடம் கேள்விகள் எழுப்பியது.
சீனாவில் புதிய சர்ச் எஞ்சின் குறித்து பேசிய சுந்தர் பிச்சை
கூகுள் சீனாவில் புதிய சர்ச் எஞ்சின் சேவையைத் தொடங்குமா என்பது குறித்த திட்டங்கள் ஏதும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவில் இது போன்ற ஒரு திட்டத்தை கொண்டு வர விரும்பினால் பாலிசி மேக்கர்களிடம் எந்த விதமான ஒளிவுமறைவுமின்றி அறிவிப்போம் என்று சுந்தர் பிச்சை கூறினார்.
Google CEO Sundar Pichai answers questions about what user data Google tracks and why during a congressional hearing on Capitol Hill //t.co/a6wIWkWUZV pic.twitter.com/G176yzMHmO
— CNN (@CNN) 12 December 2018
ஆனால் இது நாள் வரையில், சீனாவில் கூகுளின் இயக்கத்தை மீண்டும் கொண்டு வர என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
ரிபப்ளிக்கன் கட்சியில் இருப்பவர்கள் பலர் 2016ம் ஆண்டு தேர்தலின் போது எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கூகுள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார்கள். ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் வெறும் ஃபேண்டஸி என்று டெமாக்ரடிக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை “நாங்கள் இணையம் வழியாக வாக்குகளை பதிவு செய்யவே புதிய யுத்திகளை கண்டறிந்தோம். ஆனால் லத்தீன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு அளிக்க எந்த விதமான முயற்சிகளிலும் ஈடுபடவில்லை” என்றும், “அரசியல் ரீதியான பாகுபாடுகள் கூகுள் சர்ச்சில் கிடையாது” என்றும் கூறினார் சுந்தர் பிச்சை.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook