உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் பிரபலமான இன்டர்நெட் ப்ரௌசர் கூகுள் குரோம் 3 புதிய ஜெனரேட்டிவ் ஏ.ஐ-ல் அம்சங்களைப் பெறுகிறது. இந்த அம்சங்கள் தற்போது குரோம் வெர்ஷன் M121-ல் கிடைக்கின்றன. நீங்கள் இதை உங்கள் லேப்டாப், கணினியில் எனெபிள் செய்து பயன்படுத்தலாம். இது சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
1. குரூப் டேப்ஸ்
இந்த அம்சம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குரோமில் ஒரே நேரத்தில் பல்வேறு டேப்ஸ் பயன்படுத்தும் போது அதை தலைப்புக்கு ஏற்றபடி ஒன்றாக குரூப் செய்து கொள்ளலாம். குரூப் செய்ய வேண்டிய ப்ரௌசர் டேப்பின் மீது right-click செய்து ‘Organize Similar Tabs’ ஆப்ஷன் கொடுக்க வேண்டும். குரோம் இந்த டேப்களுக்கு ஏற்றபடி பெயர் பரிந்துரை மற்றும் உங்களுக்கு அடுத்த முறை உதவ இமெஜிகள் கூட பரிந்துரை செய்யும்.
2. குரோமிலும் ஹெல்ப் மீ ரைய்ட்
கூகுளின் ஜிமெயில், டாக்ஸ் ஆப்களில் இருப்பது போல் இதிலும் ஹெல்ப் மீ ரைய்ட் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. குரோமில் இதைப் பயன்படுத்த டெக்ஸ்ட் பாக்ஸ் அல்லது வெப்சைட் field-ல் கிளிக் செய்து
‘Help me write’ பட்டனை கொடுக்கவும். இப்போது நீங்கள் ஏதாவது வார்த்தைகள் டைப் செய்ய வேண்டும். குரோம் ஏ.ஐ அதுகுறித்து உங்களுக்கு பதில் அளிக்கும்.
3. கஸ்டம் பேக்குரவுண்ட் (Custom background)
உங்களுடைய கூகுள் குரோம் டேப் பேக்குரவுண்ட்டை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப Customize செய்து கொள்ளலாம். subject, mood, colour or visual style-க்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இதை செய்ய side panel சென்று
‘Customize Chrome’ ஆப்ஷன் கொடுக்கவும். அடுத்து Change theme- Create with AI ஆப்ஷன் செலக்ட் செய்யவும். இப்போது உங்களுடைய போட்டோ அல்லது அங்கு வழங்கப்பட்டுள்ள customize themes ஆப்ஷன்களை பெறலாம்.