/indian-express-tamil/media/media_files/h95wYUDjuD6qSqDOe1iZ.jpg)
கூகுள் தனது பயனர் அனுபவத்தை மேம்படுத்த குரோம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு 'சர்க்கிள் டு சர்ச்' அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஒரு பொருளின் விவரம், அல்லது படத்தின் பொருள் பற்றிய விவரம் தெரியவில்லை என்றால் அதை வட்டமிட்டு தேடுவது தான் இந்த அம்சத்தின் சிறப்பாகும்.
அந்த வகையில் கூகுள் தனது புதுமையான "சர்க்கிள் டு சர்ச்" அம்சத்தை குரோம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் சமீபத்திய சாம்சங் S24 சீரிஸின் மூலம் பிரபலமானது. ஏ.ஐ ஆதரவுடன் வரும் இந்த அம்சம் பயனர்களை திரையில் வரும் கண்டென்டை வட்டமிடுவதன் மூலம் அதை சர்ச் செய்ய முடியும்.
இந்நிலையில் கூகுள் குரோம் தனது ப்ரௌசரில் உள்ள லென்ஸை மேம்படுத்தி சர்க்கிள் டு சர்ச் அம்சம் போல் அப்டேட் செய்ய உள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு சாதனங்களில் "சர்க்கிள் டு சர்ச்" போன்ற அம்சத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது.
க்ரோமின் கூகுள் லென்ஸ் UI ஆனது ஆண்ட்ராய்டில் சர்க்கிள் டு சர்ச் அனுபவத்தை ஒத்திருக்கும் புதிய அனிமேஷனைக் காண்பிக்கும். ஸ்கிரீன்ஷாட் blur மற்றும் உங்கள் கர்சரைக் கண்காணிக்கும் லென்ஸ் ஐகானைச் சேர்ப்பது போன்ற Chrome இன் லென்ஸ் செயல்பாட்டில் முந்தைய மாற்றங்களை இது உருவாக்குகிறது.
இந்தப் அப்பேட் பற்றி எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், பயனர்கள் டெஸ்க்டாப்பில் உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்த ஃப்ரீஃபார்ம் வட்டமிடுவதை விட rectangular செலக்ஷனை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.