கூகுள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களுடன் இந்த மாதம் புதுப்பிக்கும் திட்டத்தை கூகுள் அறிவித்துள்ளது. குரோம் அறிமுகம் செய்து 15 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில் புதிய அப்டேட்டை வழங்குகிறது.
Google Chrome இன் வரவிருக்கும் தோற்றம் கடந்த சில ஆண்டுகளில் Android ஸ்மார்ட்போன் பயனர்கள் பெறத் தொடங்கிய மெட்டீரியல் யூ டிசைனை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறது. குரோம் ஐகான் ரீபிரஸ் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. உங்கள் வேறு வேறு ப்ரொபைல்களுக்கு எளிதாக மாறும் வகையிலும் தீம் நிறங்களும் மாற்றப்படுகிறது.
செட்டிங்ஸ் மெனுவும் எளிமையாகப் பயன்படுத்தும் படி நிறைய ஆப்ஷகள் சேர்க்கப்பட உள்ளது. Chrome extensions, Google Translate and Google Password Manager ஆகியவை கூகுள் மெனுவில் இணைக்கப்பட உள்ளது. மேலும் குரோமை மேலும் பாதுகாப்பான தளமாக மாற்றவும் அப்டேட்கள் கொடுக்க உள்ளது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“