கூகுள் குரோம் மிகவும் பிரபலமான மற்றும் வேகமாக செயல்படும் இன்டர்நெட் ப்ரௌசராக உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. போன், லேப்டாப், கணினி என எல்லாவற்றிலும் கூகுள் குரோம் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், உங்கள் குரோம் ஸ்லோவாக செயல்பட்டால் 'ஹார்டுவேர் ஆக்சிலரேஷன்' எனப்படும் ஒரு அம்சத்தை எமெபிள் செய்யலாம். இது வெப் பேஜ்கள் வேகமாக லோடு செய்ய உதவியாக இருக்கும். குரோம் வேமாக செயல்படும்.
இயல்பாக, குரோம் வெப் பேஜ், கன்டெண்ட் வழங்க உங்கள் கணினியின் CPU மற்றும் மென்பொருளை Chrome பயன்படுத்துகிறது. ஆனால் 'ஹார்டுவேர் ஆக்சிலரேஷன்' அம்சம் பயன்படுத்தும் போது வெப் பேஜ்களை வேகமாக லோடு செய்ய கணினி கிராஃபிக் கார்டைப் பயன்படுத்தும். நீங்கள் அடிக்கடி கிராஃபிக் அதிகமாக இருக்கும் வெப் பேஜ்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்பீர்கள் என்றால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
'ஹார்டுவேர் ஆக்சிலரேஷன்' - எப்படி எனெபிள் செய்வது?
1. குரோம் சென்று வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி பட்டனை கிளிக் செய்யவும்.
2. அங்கு செட்டிங்ஸ் சென்று ‘System’ என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது இந்த பக்கத்தில் ‘Use hardware acceleration when available’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். எனெபிள் செய்து குரோமை ரீலாஞ்ச் செய்யவும்.
இந்த ஆப்ஷன் எனெபிள் ஆகி உள்ளதா என்பதை ‘chrome://gpu’ என்று டைப் செய்து உறுதி செய்து கொள்ளலாம். எனெபிள் ஆகி இருந்தால் Graphic Feature Status’ செக்ஷனுக்கு கீழ் ‘Hardware accelerated’ என்று பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும்.
எனினும் இந்த அம்சத்தை எனெபிள் செய்த பிறகு உங்கள் கணினி அல்லது லேப்டாப் எதாவது பிரச்சனை செய்தால், இந்த ஆப்ஷனை Disable செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“