/indian-express-tamil/media/media_files/h95wYUDjuD6qSqDOe1iZ.jpg)
இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியான (CERT-In) கூகுள் குரோமின் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வைரஸ் மற்றும் Malware எச்சரிக்கையை வழங்கியுள்ளது. ஹேக்கிங் ஆபத்தும் உள்ளது என எச்சரித்துள்ளது. குறிப்பாக லேப்டாப், கணினி பயன்படுத்துவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கினால் பயனர்களின் தனியுரிமை தகவல்கள் ஹேக் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் தங்கள் குரோமை முறையாக அப்டேட் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
குரோமை பாதுகாப்பாக வைப்பது எப்படி?
- குரோமை உடனடியாக அப்டேட் செய்யவும். குரோம் வெர்ஷன் 124.0.6367.60 அப்டேட் செய்யவும்.
- சந்தேகத்திற்கிடமான இணையதளங்களைப் பார்வையிடுவதையோ அல்லது தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்வதையோ தவிர்க்கவும், குறிப்பாக இ-மெயில் லிங்க் தவிர்க்கவும்.
- புதிய விண்டோஸ் ஓபன் செய்யும் போது பாப்-அப் blockers ஆக்டிவேட் செய்யவும்.
- Cache and browsing data தொடர்சியாக கிளியர் செய்யவும்.
- ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்த வலுவான, தனித்துவமான பாஸ்வோர்ட் கொண்ட கணக்குகள் மற்றும் சாதனங்களைப் பாதுகாக்கவும்.
- Malware மற்றும் பிற அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்த்துப் போராட, ஃபயர்வால் மற்றும் வைரஸ் தடுப்பு பாதுகாப்புடன் கூடிய விரிவான பாதுகாப்பு தொகுப்புகளைப் பயன்படுத்துவதை கவனியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.