கூகுள் குரோம் ஏ.ஐ பயன்படுத்தி 'ஆர்கனைஸ் டேப்ஸ்' வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வசதி குரோம் 'டேப்ஸ்' பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும். அதாவது குரோம் பயன்படுத்தும் நம்மில் பலர் வேலை வசதிக்காக நிறைய பேப்ஸ் ஓபன் செய்து வைத்திருப்போம். இதுவே சில நேரங்களில் சிஸ்டம் hang பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கு தீர்வு காண நிறுவனம் ஏ.ஐ மூலம் automatic -ஆக ஆர்கனைஸ் செய்ய வசதி அறிமுகம் செய்கிறது.
இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் சமீபத்தில் அறிமுகம் செய்த
‘Group Similar Tabs’ போன்றே, Chrome-ன் ‘Organize Tabs’ அம்சமும் இருக்கும். அதாவது content அடிப்படையில் பல்வேறு டேப்களை ஒரே குரூப்-ல் கிளப் செய்ய முடியும்.
இந்த ‘Organize Tabs’ அம்சம் தற்போது கேனரி கட்டமைப்பில் மட்டுமே உள்ளது. அதானல் இந்த அம்சம் எப்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரியவில்லை. எனினும் விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் சமீபகாலமாக அடிக்கடி புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“