Advertisment

கூகுள் குரோமில் அசத்தல் ஏ.ஐ வசதி: மோசடி இணைதளங்களுக்கு செக்

கூகுள் நிறுவனம் அதன் குரோம் தளத்தில் ஏ.ஐ ஸ்கேம் டிடெக்ஷன் டூல் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

author-image
WebDesk
New Update
G Chrome

கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் குரோம் தளம் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான இன்டர்நெட் ப்ரௌசர் ஆகும். இந்நிலையில், குரோம் தளத்தில் ஏ.ஐ ஸ்கேம் டிடெக்ஷன் டூல் என்ற புதிய வசதியை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. 

Advertisment

அதாவது ஏ.ஐ மூலம் மோசடி இணைதளங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

டிங்கரர் Leopova64 என்பவர் தனது X பதிவில் இதுகுறித்து கூறுகையில், கூகுள் குரோமின் கேனரி வெர்ஷனில் "கிளையண்ட் சைட் டிடெக்ஷன் பிராண்ட் மற்றும் இன்டென்ட் ஃபார் ஸ்கேம் கண்டறிதல்" என்ற புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. 

இது பெயர் குறிப்பிடுவது போல, பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் இணையதளங்களைக் கண்டறிந்து உங்களை எச்சரிக்கிறது என்று கூறியுள்ளது. 

Advertisment
Advertisement

இந்த வசதியை பயன்படுத்த,  குரோமின் கேனரி வெர்ஷனை இன்ஸ்டால் செய்யவும். அதன் பின் “chrome://flags”  என address bar-ல் டைப் செய்யவும். இதன் பின் “Client Side Detection Brand and Intent for Scam Detection.” என்று அடுத்த பக்கத்தில் டைப் செய்யவும்.  பிறகு, இந்த ஆப்ஷனை எனெபிள் செய்வதற்கான பட்டன் இருக்கும் அதை கொடுக்கவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment