கூகுள் குரோம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்குப் பல புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அட்ரஸ் பார்/ சர்ச் பாரில் (Search bar) டைப் செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழைகளை புதிய அப்டேட் மூலம் தானாக சரி செய்யப்படும். இந்த புதிய அம்சம் பயனரின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தவும், நேரத்தைச் சேமிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூகுள் கூறுகையில், குரோம் ப்ரௌசர் நீங்கள் டைப் செய்யும் தகவலை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் உங்கள் History கொண்டு suggestions வழங்கும். அதோடு உங்கள் தகவல்களுக்கு தகுந்தாற் போல் அது தொடர்பான பிரபல இணையதளங்களையும் கூகுள் குரோம் காண்பிக்கும் என்று கூறியுள்ளது.
மேலும், குரோம் இப்போது automatically complete URL என்ற அம்சத்தையும் கொண்டு வந்துள்ளது. தற்போது உள்ளதை விட இந்த அம்சம் சற்று மாறுபட்டதாக இருக்கும். தற்போது நீங்கள் யூ.ஆர்.எல்-ன் முதல் வார்த்தையை டைப் செய்தால் தான் யூ.ஆர்.எல் நிறைவு செய்ய முடியும். ஆனால் தற்போது நீங்கள் ஏதேனும் வார்த்தை குறிப்பிட்டாலே அதை கூகுள் கண்டறிந்து கொடுக்கும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் Google Flights ஐப் பார்வையிட விரும்பினால், நீங்கள் பார்வையிட விரும்பும் பக்கத்தைத் தொடர்ந்து google.com-ஐ டைப் செய்யத் தொடங்க வேண்டும். இப்போது, பயனர்கள் 'விமானங்கள்' என தட்டச்சு செய்யலாம், மேலும் உங்களுக்கான இணைய முகவரியை Chrome தானாகவே பூர்த்தி செய்யும்.
மற்றொரு அம்சமாக Bookmarked folders-களையும் கண்டறியும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சர்ச் பாரில் folder-ன் பெயர் டைப் செய்தால் உங்களின் Bookmark folders collection-ல் உள்ள வெப்சைட்கள் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“