கூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா?

குகூள் குரோம் 64 வெர்ஷனில், தானாகவே ப்ளேயாகும் ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தலைச்சிறந்த தேடல் நிறுவனமான கூகுள் க்ரோமில், ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் என்றாலே புதுமை. அதைத்தொடர்ந்து நிரூப்பிக்க நாளுக்கு நாள் வித்யாசமான முயற்சிகள், ஆய்வுகள். இப்படி கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களிடம் இருந்து பெற்ற பாராட்டுக்கள் ஏராளம். இந்த பாராட்டுக்களை தக்கவைத்துக் கொள்ள, கூகுள் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை நிகழ்த்தியுள்ளது. இதன்படி, கூகுள் க்ரோமின் 64 வெர்ஷனில் புதிய அப்டேட் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெர்ஷனில், தானாகவே ப்ளேயாகும் ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் படி, பயனாளர்கள் ’வீ சைட் இன்ஃபர்மேஷன்’ குறியீடினுள் சென்று, ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்து விடலாம்.

இந்த அப்டேட் வெர்ஷன் மேக், விண்டோஸ், லின்னகஸில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வெர்ஷனில் ப்ளேயாகும் வீடியோக்களை தற்காலிகமாக மட்டுமே மியூட் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிரந்தரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

×Close
×Close