இன்டர்நெட் வசதியை இல்லாமல் கூகுள் க்ரோம் பயன்படுத்தும் முறையை கூகுள் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது .
இன்றைய தொழில்நுட்ப உலகில் இணைய சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, ரயில் நிலையம் , பார்க் பொது இடங்களிலும் வைஃபை வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் இணையவாசிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், இன்டர்நெட் இல்லாமல் கூகுளின் க்ரோமை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்பதே அந்த அறிவிப்பு. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் ஆப், நீங்கள் வைஃபை நெட்வொர்க் பயன்படுத்தும் போது தானாகவே நீங்கள் தேர்வு செய்து வைத்துள்ள செய்திகள் மற்றும் தகவல்களை டவுன்லோடு செய்துக் கொள்ளும்.
அதன் பின்பு, நீங்கள் ஆஃப் லைனில் இருக்கும் போதும் அதை பார்க்கலாம். இன்டர்நெட் இல்லாத நேரங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூகுளின் அப்டேட்ட செய்ப்பட்ட இந்த க்ரோம், யூசர்கள் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை டவுன்லோடு செய்யும். என்பது கூடுதல் தகவல். இணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் மற்றும் சீரற்ற இணைய வசதி கொண்ட சந்தைகளில் வழங்க ஏதுவாக இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த வசதி இந்தியா நைஜீரியா உட்பட 100 நாடுகளில் அறிமுகமாகியுள்ளது.