Advertisment

இனி இதில் கூகுள் குரோம் செயல்படாது.. விவரம் என்ன?

Google chrome no longer support windows 7: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 தளத்தில் அடுத்தாண்டு முதல் கூகுள் குரோம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
இனி பாஸ்வேர்டு வேண்டாம்.. 'passkeys' அம்சம் அறிமுகம்.. கூகுள் குரோம் புது அப்டேட் என்ன?

Google chrome update

Google chrome: கணினி மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் (Windows) சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் மேக் கணிணி மற்றும் லேப்டாப்களில் பிரத்யேக சாப்ட்வேர் உள்ளது. விண்டோஸ் சாப்ட்வேர் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், விண்டோஸ் 7 (Windows 7) மற்றம் விண்டோஸ் 8.1 (Windows 8.1) தளத்தில் அடுத்தாண்டு முதல் கூகுள் குரோம் (Google chrome) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1-யில் கூகுள் குரோம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி 7, 2023-யில் விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1-க்கான கடைசி வெர்ஷன் அப்டேட் கொடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.

விண்டோஸ் 7, 2009-இல் தொடங்கப்பட்டது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 க்கான முக்கிய ஆதரவை 2020 இல் நிறுத்தியது. கூகுள் Windows 7 ESU மற்றும் Windows 8.1 ஆகியவற்றிற்கான மைக்ரோசாப்ட் ஆதரவை ஜனவரி 10, 2023 வரை நீட்டித்துள்ளது. தி வெர்ஜ் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 100 மில்லியனுக்கும் அதிகமான கணினிகள் விண்டோஸில் இயங்குகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வெர்ஷன் தளம் பயன்படுத்தும்போது நிறைய பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது. Chrome 110 தொடர்ந்து வேலை செய்யும் போதும் எந்த புதிய அம்சங்களும், பாதுகாப்பு இணைப்பும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தனது பயனர்களின் வசதி, பாதுகாப்புக்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளை கருத்தில் கொண்டு அப்டேட் வழங்கும். மேலும் கூகுள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 பயனர்கள் கூகுள் குரோம் வசதிகளைப் பயன்படுத்த வேறு விண்டோஸ் தளத்திற்கு அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment