/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project24-1.jpg)
Google chrome
உலகின் மிகவும் பிரபலமான வெப் ப்ரௌசர் கூகுள் குரோம் புதிய அப்டேட்களை அறிமுகம் செய்ய உள்ளது. பயனரின் தேடல், டவுன்லோடு அனுபவத்தை மேம்படுத்த கூகுள் குரோம் புதிய அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
குரோமின் சமீபத்திய அப்டேட் Address bar-ல் ட்ரெண்டிங் சர்ச்களை கொடுக்கிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டில் வருகிறது. தற்போது இந்த அம்சம் ஆப்பிள் பயனர்களுக்கும் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு ஆண்ட்ராய்ட், ஆப்பின் இரண்டிலும் தகுதியான தளங்களில் இருந்து குரோம் மேம்பட்ட தேடல்களை வழங்கிறது. உதாரணமாக நீங்கள் ஜப்பான் பற்றிய செய்தியை தேடி படிக்கிறீர்கள் என்றால் மீண்டும் Address bar-யை நீங்கள் கிளிக் செய்யும் போது ஜப்பானில் உள்ள உள்ளூர் உணவகங்கள், சுற்றுலா இடங்கள் போன்ற பிற தேடல்களையும் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மற்றொரு புதிய அம்சமாக கூகுள் குரோம் டச் டு சர்ச் அம்சத்தையும் வழங்குகிறது. மேலும், குரோம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப தேடல் பரிந்துரைகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 10 உயர்த்தி உள்ளது.
மறுபுறம், டெஸ்க்டாப்பில், Google MacOS, Windows மற்றும் ChromeOS ஆகியவற்றிற்கான மறுவடிவமைக்கப்பட்ட பதிவிறக்க அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.