/indian-express-tamil/media/media_files/ecJfkPXvyXX45yn6OZ4Q.jpg)
கூகுள் தனது க்ளாக் செயலியில் சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்திய வெர்ஷனில் (க்ளாக் v7.6) வானிலை முன்னறிவிப்பு மற்றும் WearOS வாட்ச் உடன் அலாரம் சிங்க் செய்யும் வசதியும் அறிமுகம் செய்கிறது.
மிஷால் ரெஹ்மான் என்பவர் வெளியிட்டுள்ள X பதிவில், கூகுள் க்ளாக் செயலியில் புதிய அலாரம் அமைக்கும் போது, 'வானிலை முன்னறிவிப்பு' என்ற புதிய ஆப்ஷன் உள்ளது. இதை எனெபிள் செய்தால் காலையில் அலாரம் ஆப் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து வானிலை முன்னறிவிப்பை காண்பிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
An update to the Google Clock app is rolling out that adds the following features:
— Mishaal Rahman (@MishaalRahman) October 17, 2023
* A new "weather forecast" toggle when setting an alarm. When the alarm is dismissed, the Clock app will show you the weather forecast for the day.
* A new "alarm sync" option in settings. This… pic.twitter.com/eyBRfiVVvT
இருப்பினும், இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட வில்லை. Android 14 QPR1 பீட்டாவில் இயங்கும் Pixel 8 அல்லது Pixel 8 Pro பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த புதிய அப்டேட்டில் ‘alarm sync option’ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை எமெபிள் செய்தால் அலாரத்தை உங்கள் போன் மற்றும் பிக்சல் வாட்ச் உடன் இணைக்கலாம். இதோடு கூகுள் சில தனது க்ளாக் செயலிக்கு மேலும் சில ஆப்ஷன்கள் மற்றும் அப்டேட்களை வழங்கி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.