Marga Faulstich Google Doodle: ஜெர்மனியை சேர்ந்த பிரபல கண்ணாடி வேதியியலாளர் மார்கா ஃபோல்ஸ்டிக்கின் 103 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு கூகுள் டூடுளை வெளியிட்டுள்ளது.
மார்கா ஃபோல்ஸ்டிக்கின் ஒரு கண்ணாடி வேதியியலாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி ஜெர்மனியின் வெய்மர் என்ற இடத்தில் 40 க்கும் மேற்பட்ட வகையான ஆப்டிகல் கண்ணாடிகளை உருவாக்கியுள்ளார். இவர், 44 ஆண்டுகளாக ஸ்கொட் ஏஜியில் பணிப்புரிந்துள்ளார். ஷோட் ஏஜியின் முதல் பெண் நிர்வாகியும் இவரே ஆவர்.
1935 ல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, ஐரோப்பாவில் உள்ள ஆப்டிகல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு கண்ணாடி உற்பத்தியாளர்களில் ஒருவரான ஸ்கொட் ஏஜி நிறுவனத்தில் உதவியாளராகப் பயிற்சி பெற்றார்.அங்கு பணிப்புரிந்துக் கொண்டே பல்வேறு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் ஈடுப்பட்டார். மேலும் சன்கிளாஸ்கள், எதிர்ப்பு பிரதிபலிப்பு லென்ஸ்கள் ஆகியவற்றையும் கண்டுப்பிடித்தார்.
ஒரு திறமையான ஆராய்சியாளராக இளம் வயதிலியே ஃபோல்ஸ்டிக் விரைவாக முன்னேறினார் - பட்டதாரி உதவியாளராக இருந்து தொழில்நுட்ப வல்லுநராகவும், பின்னர் அறிவியல் உதவியாளராகவும் இறுதியாக ஒரு விஞ்ஞானியாகவும் வளர்ச்சி அடைந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிலைமை மாறியதால் உலகில் மிக முன்னேறிய கண்ணாடித் தயாரிப்புகள் வெளிவர தொடங்கின.
1949 ஆம் ஆண்டில் ஸ்கொட் ஏஜெட், புதிய கண்டுப்பிடிப்புகளுக்காக புதிய ஆய்வகத்தை லண்ட்சட்டில் கட்டியது. இங்கு தான், ஃபோல்ஸ்டிக்கின் ஆப்டிகல் கண்ணாடிகளை ஆராய்ச்சி மேம்ப்பட்டது.கூட்டு நுண்ணோக்கிகளுக்கும் தொலைநோக்கியிற்கும் லென்ஸ்கள் மீது பொருத்தப்படும் கண்ணாடி லென்சுகளையும் புதுபிக்கும் முயற்சியில் ஃபோல்ஸ்டிக் இறங்கினார்.
ஃபோல்ஸ்டிக் இலகுரக லென்ஸ் SF 64 கண்டுபிடிப்பிற்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி 82 வயதில் மார்கா ஃபோல்ஸ்டிக் இயற்கை எய்தினார். இவரின் 103 ஆவதுய் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை போற்றும் விதமாகவும், மார்கா ஃபோல்ஸ்டிக்கை கவுரவிக்கும் விதமாகவும் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் அவரின் புகைபடத்தை வைத்து கவுரவித்துள்ளது.