Google drive now supports offline mode access Tamil News
Google drive now supports offline mode access Tamil News : கூகுள் ட்ரைவ் இப்போது ஆஃப்லைன் பயன்முறையில் ஆதரவை வழங்குகிறது. கூகுள் நிறுவனம் அதன் வலைப்பதிவு இடுகையில் சமீபத்திய புதுப்பிப்பை அறிவித்துள்ளது. பயனர்கள் இப்போது PDF, அலுவலக ஃபைல்கள் மற்றும் படங்களை ஆஃப்லைனில் அணுக முடியும். இருப்பினும், அதற்காக, முதலில் ஃபைல்களை ஆஃப்லைனில் கிடைக்கும்படி குறிக்கப்பட வேண்டும். இணையத்துடன் இணைக்கப்படாவிட்டாலும் ப்ரவுசரைப் பயன்படுத்தி பயனர்கள் ஃபைல்களை திறக்க இது அனுமதிக்கும்.
Advertisment
கூகுள் இந்த அம்சத்தை 2019-ல் சோதனை செய்யத் தொடங்கியது. இது கூகுள் அல்லாத ஃபைல் வகைகளை இணையத்தில் கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் போது ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்யப் பயனர்களை அனுமதித்தது. இந்த அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, எவரும் இப்போது ஆஃப்லைனில் அணுக விரும்பும் PDF-கள், படங்கள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இதை அடைய, மேக் அல்லது விண்டோஸில் டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கான கூகுள் டிரைவ் முதலில் நிறுவப்பட வேண்டும். மேலும், "ஆஃப்லைன்" அணுகல் விருப்பத்தை, வெப்பில் உள்ள ட்ரைவ் அமைப்புகளில் செயல்படுத்தப்பட வேண்டும். அமைவு செயல்முறையை முடித்த பிறகு, ஆதரிக்கப்படும் ஃபைலின் மேல் வைத்து வலது கிளிக் செய்தால் "ஆஃப்லைனில் கிடைக்கும்" என்பதைத் தேர்வு செய்வதற்கான மாற்று காண்பிக்கப்படும்.
Advertisment
Advertisements
இந்த அம்சம் அனைத்து கூகுள் Workspace வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். மேலும், கிளவுட் அடையாள இலவசம், கிளவுட் அடையாள பிரீமியம், ஜி சூட் பேசிக் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். தனிப்பட்ட கணக்குகள் உள்ளவர்களுக்காக கூகுள் அதை வெளியிடுகிறது.
உங்கள் 15 ஜிபி இலவச சேமிப்பகம் தீர்ந்துவிட்டால், கூகுள் டிரைவில் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து காப்புப் பிரதி எடுக்கக் கூடுதல் சேமிப்பிடத்தை வாங்கலாம். இந்தியாவில், பயனர்கள் மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.
100 ஜிபி சேமிப்பு இடத்தை மாதம் ரூ.130-க்கு கூகுள் வழங்குகிறது. உங்களுக்கு அதிக இடம் வேண்டுமானால், 2TB சேமிப்பு இடத்தை மாதம் 650 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தையும் கூகுள் கொண்டுள்ளது. கூடுதலாக, உங்களுக்கு 200 ஜிபி டேட்டாவை மாதத்திற்கு ரூ. 200-க்கு வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil