உங்களின் நிறுவனத்திற்கு புதிய ஊழியர்களை நியமிக்க உதவும் கூகுள் ஹையர்

செயலியை உபயோகிக்க hire.google.com - ல் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

By: September 18, 2018, 11:08:12 AM

ஆண்ட்ராய்ட் மிக சமீபத்தில் புதிய செயலி ஒன்றினை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்திருக்கிறது. G Suite – உடன் இணைந்து செயல்படும் கூகுள் ஹையர் (Google Hire) என்ற அந்த செயலி மூலம் உங்கள் நிறுவனத்திற்கு தேவையான புதிய ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

Google Hire app ஓர் அறிமுகம்

அன்ரிலீஸ்ட் என்று குறிக்கப்பட்டிருக்கும் அந்த செயலியை உபயோகிக்க நீங்கள் hire.google.com என்ற பகுதியில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

2017ம் ஆண்டு முதல் முறையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்ட போது சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு தேவையான ஊழியர்களை நியமிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.  இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த செயலியை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கு முன்பு நீங்கள் ஹையர் ப்ரோகிராம் திட்டத்தில் ஒரு உறுப்பினராக உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் சிறிய மற்றும் நடுத்தர அலுவலகம் மற்றும் தொழிற் துறைக்களுக்கு புதிய வேலையாட்களை நீங்கள் கூகுள் ஹையர் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த ஹையர் செயலி லிங்க்டின், மான்ஸ்டர், மற்றும் வொர்க்கபல் போன்ற வேலை வாய்ப்புகள் பற்றி அறிய உதவும் நிறுவனத்திற்கு இணையாக இந்த செயலி செயல்படும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Google hire helps you to find the right employees for your small to medium size businesses

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X