ஏ.ஐ. புரட்சி: கூகுள் I/O-வில் உலகை மாற்றும் 5 அறிவிப்புகள்!

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (Google I/O) பல புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ஜெமினி ஏஐ அறிவிப்புகளாலேயே நிரம்பி இருந்தது என்று கூறலாம். கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் 5 சுவாரஸ்யமான அறிவிப்புகள் பற்றி காணலாம்.

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (Google I/O) பல புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ஜெமினி ஏஐ அறிவிப்புகளாலேயே நிரம்பி இருந்தது என்று கூறலாம். கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் 5 சுவாரஸ்யமான அறிவிப்புகள் பற்றி காணலாம்.

author-image
WebDesk
New Update
5 Google I/O 2025 features

ஏ.ஐ. புரட்சி: கூகுள் I/O-வில் உலகை மாற்றும் அறிவிப்புகள்!

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (Google I/O) ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதில், கூகுள் தனது புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகளை அறிவிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் பெரும் பங்கு வகித்தன. கூகிளின் பல தயாரிப்புகளில் அப்டேட் பட்டியலை வெளியிட்டது. மாதத்திற்கு $250 அல்ட்ரா சந்தா முதல் தேடலின் புதிய AI-இயங்கும் அப்டேட் வரை, எக்கச்சக்க அப்டேட்களை கூகிள் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. 

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: 5 Google I/O 2025 features you can try right now in India

ஜெமினி 2.5 மாடல்கள் அப்டேட்: கூகிளின் முதன்மை AI மாடலான ஜெமினிக்கு சில குறிப்பிடத்தக்க அப்டேட் கிடைத்துள்ளன. புதிய ஜெமினி 2.5 ப்ரோ, சிக்கலான கணித மற்றும் கோடிங் சிக்கல்களை தீர்ப்பதற்காக "டீப் திங்க்" பயன்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது பதிலளிப்பதற்கு முன் பல சாத்தியக்கூறுகளை ஆராயும். அதேநேரத்தில் ஜெமினி 2.5 ஃபிளாஷ், வேகமான மற்றும் குறைந்த விலை பதிப்பாகும். இது நீண்ட உரை, படங்கள், குறியீடுகள் மற்றும் தர்க்கரீதியான பணிகளை மிகவும் திறமையாக கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ப்ரோவைப் போலவே திறன் வாய்ந்தது. ஆனால் 20-30% குறைவான டோக்கன்களைப் பயன்படுத்துகிறது. இதனால், அதிக செயல்திறனை விரும்பும் டெவலப்பர்களுக்கு இது குறைந்த செலவு விருப்பமாக அமைகிறது.

கூகுள் பீம்: இது முதன்முதலில் 2021-ல் ”ப்ராஜெக்ட் ஸ்டார்லைன்” என அறிவிக்கப்பட்டது. இறுதியாக இப்போது தயாராக உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், உங்கள் சலிப்பூட்டும் வீடியோகால் கால்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. இது ஒரு 3டி வீடியோ கான்பரன்சிங் அமைப்பாகும். ஒரு நேரடி தொடர்பு உணர்வைப் பிரதிபலிக்கிறது. இது 6 கேமராக்கள், ஏஐ, மேம்பட்ட மற்றும் சிறப்பு காட்சிகளை பயன்படுத்தி உண்மை போன்ற, உயர் நம்பகத்தன்மை கொண்ட படங்களை வழங்க உதவுகிறது. இவை அனைத்தும் நிகழ்நேரத்தில் 60fps இல் நடக்கும். மேலும் ஹெட் ட்ராஸ்கிங் மிக துல்லியமாக இருக்கும் என்றும் கூகிள் கூறுகிறது. இப்போது பணியிடங்களில் வணிக பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிறுவன மட்டத்தில் இதை முதலில் கொண்டு நிறுவனம் ஆக எச்பி (HP) இருக்கும்.

Advertisment
Advertisements

AI அல்ட்ரா: கூகுள் "AI அல்ட்ரா" என்ற புதிய பிரீமியம் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் விலை மாதத்திற்கு $250 ஆகும். பயனர்கள் கூகிளின் புதிய AI கருவிகளுக்கான ஆரம்ப அணுகல், டீப் ரிசர்ச் போன்ற அம்சங்களின் வரம்பற்ற பயன்பாடு மற்றும் கூகுள் போட்டோஸ், டிரைவ் மற்றும் ஜிமெயில் முழுவதும் 30TB சேமிப்பகம் ஆகியவற்றைப் பெறுவார்கள். இதில் யூடியூப் பிரீமியம், பிராஜெக்ட் மரைனர் போன்ற சோதனை அம்சங்களுக்கான அணுகலும் அடங்கும்.

கூகுள் மீட் லைவ் டிரான்ஸ்லேஷன்: ஜெமினி அடிப்படையிலான ஏஐ அம்சத்துடன், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மீட்டிற்கான "லைவ் ஸ்பீச்" மொழிபெயர்ப்பை கொண்டுவருகிறது. புதிய அம்சத்தின் மூலம், உங்கள் பார்ட்னர் விரும்பும் மொழியில் நீங்கள் சொல்வதை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்க முடியும். கூடுதலாக, உரையாடலை மொழிபெயர்க்கும்போது, ​​குரலின் இயல்பான வெளிப்பாடுகளை அப்படியே வைத்திருக்க ஏஐ முயற்சிக்கும் என்றும், இதனால் தொனி மற்றும் வெளிப்பாடு சரியாக இருக்கும் என்றும் கூகுள் உறுதியளிக்கிறது. விளக்கக்காட்சியின் போது, ​​ஆங்கில பேச்சாளர் ஒருவர் ஸ்பானிஷ் பேச்சாளருடன் அழைப்பில் இருப்பது போன்ற ஒரு டெமோவை கூகுள் காட்டியது. தற்போது, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு செயல்படுகிறது. விரைவில் கூடுதல் மொழிகள் சேர்க்கப்படும். இந்த அம்சம் முதலில் கூகுள் AI ப்ரோ மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. 

ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்ளைஸ்: இ-மெயில் எழுதும் ​​செயல்முறையை எளிதாக்க கூகுள் இப்போது இன்னும் ஸ்மார்ட் ஆன பரிந்துரைகளை வழங்குகிறது. இப்போது, ​​ஜெமினி உங்கள் ஜிமெயில் பாக்ஸ்கள், உங்கள் மெயில் த்ரெட்ஸ், டிரைவ் மற்றும் பிற குறிப்புகளிலிருந்து தகவல்களை சேகரித்து, உங்களுக்காக ஒரு மின்னஞ்சல் பதிலை உருவாக்கும் போது உங்கள் எழுத்து பாணியைப் பின்பற்ற முயற்சிக்கும் என்று கூகுள் கூறுகிறது. அதாவது இது ஜிமெயிலில் நாம் பெறும் ஷார்ட் ரிப்ளைகளை போலல்லாமல், நீண்ட பதில்களை உருவாக்கும். மேலும், இது உங்கள் வழக்கமான தொனிக்கு ஏற்பவும், வெவ்வேறு நபர்களுடன் வித்தியாசமாக பேசும். உங்கள் மேலாளரிடம் பேச வேண்டியிருந்தால் அதற்கு ஏற்ப முறையாக பேசும், ஒரு நண்பரிடம் பேசும்போது ஜாலியாக பேசும்.

கூகுள் I/O 2025 மாநாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) அறிவிப்புகளால் நிரம்பி இருந்தது. ஜெமினி AI இன் புதிய பதிப்புகள், பல்வேறு கூகுள் சேவைகளில் AI ஒருங்கிணைப்பு, புதிய AI மாடல்கள் மற்றும் மேம்பட்ட Android அம்சங்கள் ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்.

Technology Google

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: