கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது சைன்-ன் செய்யப்படாத அக்கவுண்ட்கள் (இன்ஆக்டிவ் அக்கவுண்ட்கள்) நீக்கப்படும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் நிறுவனம் அறிவித்தது. இது கூகுளின் புதிய கொள்ளை என்றும் பயனர் பாதுகாப்பதற்கும், இன்ஆக்டிவ் அக்கவுண்ட் கணக்குகளை பராமரிப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
அப்படி செய்யும் போது இன்ஆக்டிவ் அக்கவுண்ட் தொடர்புடைய ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் நீக்கப்படும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கூகுள் கணக்கு டெலிட் செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்க, புதிய கொள்கையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் பர்சனல் அக்கவுண்ட்டிற்கு மட்டும் பொருந்தும். பள்ளிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய கணக்குகளுக்கு அல்ல.
டிசம்பர் 1, 2023-ல் இருந்து கூகுள் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்களை கண்டறிந்து டெலிட் செய்யத் தொடங்கும்.
முன்னதாக கூகுள் உங்கள் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்கள் தொடர்பாக பல நோட்டிவிக்கேஷன்களை அனுப்பி இருக்கும்,. recovery email-க்கும் இது தொடர்பான நோட்டிவிக்கேஷன்களை அனுப்பி இருக்கும்,
இன்ஆக்டிவ் அக்கவுண்ட்களை மீண்டும் பயன்படுத்த அந்த கவுண்ட் கொண்டு யாருக்காவது மெயில் அனுப்பலாம். அந்த மெயில் லாக்கின் செய்து யூடியூப் வீடியோ பார்க்கலாம், கூகுள் போட்டோஸ் பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோர் கூட பயன்படுத்தலாம். இவை சிம்பிளான முறையில் உங்கள் இன்ஆக்டிவ் அக்கவுண்டை ரீ- ஆக்டிவேட் செய்ய உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“