Advertisment

ஏ.ஐ அம்சங்கள், லைவ் கேப்ஷன்ஸ்: கூகுள் குரோம்புக் பிளஸ் அசத்தல் அறிமுகம்

Google Chromebook Plus: டபுள் பெர்பாமன்ஸ் மற்றும் ஏ.ஐ அம்சங்களுடன் கூகுளின் குரோம்புக் பிளஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chromebook Plus.jpg

கூகுள் நிறுவனம் தனது ப்ரீமியம் லேப்டாப் வகைகளில் புதிதாக குரோம்புக் பிளஸ் லேப்டாப்பை சேர்க்கிறது. இது வேகமான ப்ராஸசர், டபுள் மெமரி மற்றும் அதிக ஸ்டோரேஜ் ஆகியவை வழங்குகிறது. 

Advertisment

வேகமான ஹார்டுவேர் அம்சங்கள் மட்டுமல்லாது கூகுள் ஏ.ஐ மூலம் இயங்கும் பல்வேறு  அம்சங்களையும் இதில் அறிமுகப்படுத்துகிறது. அவை Chromebook Plus பயனர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கும்

குரோம்புக் பிளஸ் சாப்ட்வேர் அம்சங்கள்

புதிய குரோம்புக் பிளஸ் லேப்டாப்பில் பல புதிய சாப்ட்வேர் அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங் செய்ய பிரத்யேக கன்ட்ரோல் பேனல் வழங்குகிறது. மேலும் ஏ.ஐ மூலம் இயங்கும் அம்சங்கள் noise cancellation, background blur, live captions and improved lighting ஆகியவையும் வழங்கப்படுகிறது. 

நெட்வோர்க் வசதி இல்லாமல் ஃபைல்களைப் பயன்படுத்த விரும்பினால், டிரைவ் பயனர்களுக்கு ஆட்டோமேட்டிக் பைல்  sync  அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் Magic Eraser, HDR மற்றும் போர்ட்ரெய்ட் பிளர் ஆகியவைகளும் இதில் பயன்படுத்தலாம். அதோடு குறிப்பிட்ட போட்டோஸ், வீடியோ தேர்ந்தெடுத்து அதை மூவிஸ் ஆக உருவாக்கலாம்.

Chromebook Plus வாங்கும் பயனர்கள் மூன்று மாதங்களுக்கு இலவச Adobe Photoshop மற்றும் Express மற்றும் Nvidia GeForce Now ஆகியவை இலவசமாக பயன்படுத்தலாம். 

சிறப்பம்சங்கள்

குரோம்புக் பிளஸ் 12th Intel Core i3 அல்லது AMD Ryzen 3 7000 சீரிஸ் கொண்டுள்ளது. CPU, குறைந்தபட்சம் 8GB RAM, 128GB இன்டர்னெல் ஸ்டோரேஜ், முழு HD IPS டிஸ்ப்ளே உள்ளது.  1080p வெப்கேம் ஆதரவு கொண்டுள்ளது. 10 மணிநேர பேட்டரி லைவ் வழங்க கூடிய திறன் உள்ளது. 

விலை 

 குரோம்புக் பிளஸ் தற்போது $399 (ரூ. 33,000) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment