Advertisment

குற்றங்களை தடுக்க உதவும் கூகுள் 'டிராக்கர் எச்சரிக்கை' அம்சம்: என்ன இது? எப்படி பயன்படுத்துவது?

Google introduces ‘Unknown Tracker Alert’ feature for Android: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் 'டிராக்கர் எச்சரிக்கை' அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Google introduces ‘Unknown Tracker Alert’ feature

Google introduces ‘Unknown Tracker Alert’ feature

‘Unknown Tracker Alert’ feature: இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் நிறுவனம் ஆப்பிளுடன் இணைந்து ‘அன்நோன் டிராக்கர் அலர்ட்ஸ்’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. தம்முடன் பயணிக்கும் தேவையற்ற ப்ளூடூத் டிராக்கர்களைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்படுகிறது.

Advertisment

ஏர்டேக்ஸ் மற்றும் டைல்ஸ் போன்ற ப்ளூடூத் டிராக்கர்கள் தொலைந்த பொருட்கள், செல்போன்களை கண்காணித்து அவற்றைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அதே நேரம் ப்ளூடூத் டிராக்கர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பட்ட நபர்களை பின்தொடர்வதற்கும், திட்டமிட்ட கார் திருட்டு போன்ற குற்றங்களைச் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தம்முடன் பயணிக்கும் தேவையற்ற ப்ளூடூத் டிராக்கர்கள், சந்தேகத்திற்குரிய ப்ளூடூத் டிராக்கர் ஐ.டிகளை கண்காணித்து பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ‘அன்நோன் டிராக்கர் அலர்ட்ஸ்’ அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 6 மார்ஷ்மெல்லோ அல்லது அதற்கு மேம்பட்ட வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. சந்தேகத்திற்குரிய ப்ளூடூத் டிராக்கர் ஐ.டிகளை கண்காணித்தால் அது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கிறது.

அவ்வாறு வரும் போது, அந்த ஐ.டி-யை கிளிக் செய்து மேலும் பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதை கிளிக் செய்வதன் மூலம் மேம் காண்பிக்கப்படும், எப்போது இருந்து அந்த ஐ.டி உங்களைப் பின் தொடர்கிறது. பயனர்கள் தங்கள் தொலைபேசியின் பின்புறம் டிராக்கரைக் கொண்டு வருவதன் மூலம் உரிமையாளரின் serial நம்பர் மற்றும் தகவலை தெரிந்து கொள்ளலாம். உரிமையாளருக்குத் தெரிவிக்காமல் டிராக்கரின் தகவலைக் கண்டுபிடிக்க , 'ப்ளே சவுண்ட்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் மொபைல் போனில் செட்டிங்ஸ் அம்சம் சென்று Safety and Emergency பக்கம் சென்று Unknown tracker alerts என்பதை கிளிக் செய்யவும். அடுத்து Scan Now பட்டனை கொடுக்கவும். இப்போது உங்களைச் சுற்றியுள்ள டிராக்கர்கள், உரிமையாளர்களிடமிருந்து separate செய்யப்பட்ட டிராக்கர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment