New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-46.jpg)
Google Keep
Google Keep: கூகுள் கீப் நோட் ஆப்-ல் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Google Keep
கூகுள் நிறுவனத்தின் கூகுள் கீப் ஆப்-ல் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் (Text formatting) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். கூகுள் கீப் பிரபலமான Note-taking ஆப் ஆகும். எனினும் இதில் புதிதாக டெக்ஸ்ட் வடிவங்கள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. பயனர்கள் பலரும் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஆப்ஷன் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது bold, italicize, underline, and strikethrough எனப் பல்வேறு டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஆப்ஷன்களை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் டெக்ஸ்ட்டை Organised- ஆக வைத்துக் கொள்ள உதவும்.
Google Keep is FINALLY rolling out text formatting support!
— Mishaal Rahman (@MishaalRahman) August 18, 2023
I just updated the Google Keep Android app to version 5.23.322.05 and got the feature.
It seems the feature is slowly rolling out to some users. Let me know if text formatting is enabled for you! pic.twitter.com/PB0jmCZ0XH
இந்த அம்சம் கூகுள் கீப்-ல் டெக்ஸ்ட் டைப் செய்யும் போது மேலே ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஆப்-ஐ அப்டேட் செய்து இந்த புது வசதியைப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.