சேர்ச் ஹிஸ்டரி டெலிட் அப்டேட் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியாகியுள்ளது. ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வரும்.
கூகுள் நிறுவனம், 2021 I/O மாநாட்டின் போது, கூகுள் சேர்ச்சில் வரவிருக்கும் புதிய மாற்றங்களை அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைத்துள்ள புதிய அப்டேட்டில் கடைசி 15 நிமிடங்களுக்கான கூகுள் சேர்ச் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்திட முடியும்.
இந்த அம்சத்தை XDA டெவலப்பர்களின் மிஷால் ரஹ்மான் முதன்முதலில் கண்டறிந்தார். இந்த அப்டேட் தொடர்பான தகவல் கிடைத்திருந்ததாகவும், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வசதி வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, பயனர்கள் மொபைலின் default கூகுள் செயலியை ஓப்பன் செய்து, ப்ரோபைல் பிக்சர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அப்போது, Accounts Settings பேஜ் திரையில் தோன்றும். அதில், 15 நிமிடங்கள் ஹிஸ்டரி டெலிட் செய்யும் ஆப்ஷனை காண முடியும்.
இந்த வசதியை ஜூலை 2021 இல் iOS சாதனங்களில் Google வழங்கியது. ஆனால், ஆண்ட்ராய்டு வழங்கக்கூடிய தேதியை அறிவிக்கவில்லை. இந்த புதிய அப்டேட், ஓரிரு வாரத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கூடும். பயனர்கள், ஹோம் பேஜ்ஜில் உள்ள சேர்ச் பார் மூலமாகவோ அல்லது கீழே இருந்து சாதனத்தில் ஸ்வைப் செய்வதன் மூலமாகவோ அணுகலாம்.
டெஸ்க்டாப்பில் இந்த அம்சத்தை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஜூலையில் ஐஓஎஸில் அறிமுகப்படுத்திய வசதியை, தற்போது தான் ஆண்ட்ராய்டுக்கு கூகுள் வழங்குகிறது.
இந்தாண்டு, கூகுள் அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டை மவுண்டன் வியூ தலைமையகத்தில் உள்ள அதன் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடத்துகிறது. இலவசமாக ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil