/indian-express-tamil/media/media_files/uhJivatXhVi0TnxaYxZP.jpg)
கூகுள் நிறுவனம் தனது சேவைகளுக்கு பாஸ்கீஸ் (passkeys) லாக்கின் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில் பாஸ்கீஸ் லாக்கினை டிஃபால்ட் ஆப்ஷனாக கூகுள் மாற்றியுள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பாஸ்கீஸை தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகின்றனர். பாஸ்வேர்ட் ப்ரீ எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். கூகுள் ஆண்ட்ராய்டு OS மற்றும் குரோம் ப்ரௌசரில் பாஸ்கீஸை அக்டோபர் 2022-ல் அறிமுகப்படுத்தியது. பின்னர் இந்தாண்டு மே மாதம் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுக்கும் சேவையை விரிவுபடுத்தியது.
இந்நிலையில் தற்போது கூகுள் அக்கவுண்ட்களுக்கு பாஸ்கீஸை டிஃபால்ட் லாக்கினாக மாற்றியுள்ளது. நீங்கள் பாஸ்கீஸை பயன்படுத்தினால் பாஸ்வேர்ட் பதிவிடத் தேவையில்லை.
எ.கா ஜிமெயிலில் நீங்கள் பாஸ்கீஸை எனெபிள் செய்தால், “Skip password when possible” என்ற ஆப்ஷன் காண்பிக்கும். இதை பயன்படுத்தலாம். பாஸ்கீஸ் உங்கள் Biometrics or Fingerprint பயன்படுத்தலாம்.
கூகுள் அக்கவுண்ட்களில் பாஸ்கீஸ்
கூகுள் அக்கவுண்ட்களில் பாஸ்கீஸ் எனெபிள் செய்ய, 1. முதலில் myaccount.google.com இணையதளம் செல்லவும்.
2. Security என்பதை கிளிக் செய்யவும்.
3. How you sign into Google ஆப்ஷனில் Passkeys தேர்ந்தெடுக்கவும்.
4. Use passkeys பட்டனை கிளிக் செய்யவும்.
5. கீழே உள்ள Create a Passkey பட்டனை கிளிக் செய்யவும்.
6. New passkey-ல் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்கவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.