கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலிக்கு புதிய அப்டேட்களை சேர்த்துள்ளது. அன்-டிவைஸ் லொக்கேஷன் History மற்றும் Timeline கிரியேஷன் உள்பட பல வசதிகளை சேர்த்துள்ளது. அதோடு ப்ளூ டாட் வசதியிலும் மேம்படுத்தல் செய்துள்ளது.
இதுகுறித்து கூகுள் கூறுகையில், குறிப்பிட்ட இடத்தில் தங்களது செயல்பாடுகளை பயனர்கள் எளிதில் பார்க்கலாம். லொக்கேஷன் History, directions, searches, and visits ஆகியவைகளை எளிதில் டெலிட் செய்யலாம் எனக் கூறியுள்ளது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் கூகுள் மேப்ஸில் நீங்கள் ஒரு இடத்தை தேடுகிறீர்கள் என்றால், அந்த இடம் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளையும் ஆப்ஸ் உங்களுக்குக் காண்பிக்கும். வேண்டுமென்றால் நீங்கள் இதை டெலிட் கூட செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஆஃப்லைன் டைம்லைன் மற்றும் லொக்கேஷன் History
லொக்கேஷன் History ஆப்ஷன் எனெபிள் செய்திருந்தால் இனி லொக்கேஷன் History மற்றும் டைம்லைன் விவரங்களை கிளவுடில் சேமிப்பதற்கு பதிலாக இனி உங்கள் போனில் ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ளலாம்.
கூகுள் மேப்ஸில் பயனரின் இருப்பிடத்தை காண்பிக்கும் சிறிய ப்ளூ டாட் வசதியிலும் மேம்படுத்தல் செய்துள்ளது. இதை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் டைம்லைன் அல்லது லொக்கேஷன் History ஆன் செய்துள்ளீர்களா? மற்றும் கூகுள் மேப்ஸ் உங்கள் இருப்பிடத்தை அணுக முடியுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“