Advertisment

கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள்; தனித்துவமான அம்சங்கள்.. இது தெரியாம போச்சே!

தனித்துவமான அம்சங்களுடன் கூகுள் மேப்ஸுக்கு சிறந்த மாற்றாக இங்கு சில நேவிகேஷன் ஆப் குறித்துப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள்; தனித்துவமான அம்சங்கள்.. இது தெரியாம போச்சே!

கூகுள் மேப்ஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் நேவிகேஷன் செயலியாகும். கூகுள் வழங்கும் சிறந்த அம்சங்களுள் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் ஏராளமானோர் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி காட்டுகிறது. கூகுள் மேப்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான நேவிகேஷன் தளங்களில் ஒன்றாகும். அவ்வப்போது பயனர்களின் வசதிக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சில ஆண்டுகளில், MapMyIndia, Sygic, Waze மற்றும் பிற நேவிகேஷன் செயலிகள் பிரபலமடைந்தன. அவைகள் தனித்துவமான அம்சங்களுடன் செயல்படுகிறது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

Mappls (MapmyIndia Move)

MapmyIndia Move என்றும் அழைக்கப்படும் Mappls, இந்தியாவில் Google Maps-க்கு மிகவும் பிரபலமான மாற்றுகளில் ஒன்றாகும். குரல் வழிகாட்டுதல் மற்றும் ரியல் டைம் ட்ராஃபிக் போன்ற நிலையான அம்சங்களைத் கொண்டுள்ளது. அதோடு தெரு விளக்குகள் இல்லாத இடம், வேகத்தடைகள், பள்ளங்கள், தண்ணீர் தேங்குதல் போன்ற சிக்கல்கள் நிறைந்த இடத்தை குறித்தும் கண்டறிந்து வழங்கும் நல்ல அம்சங்களை Mappls கொண்டுள்ளது.

publive-image

கூகுள் மேப்ஸிலிருந்து தனித்து நிற்கும் ஒரு விஷயம், Mappls ID. இது 6 இலக்க எண் கொண்ட சிக்கலான முகவரிகளை கண்டறிய உதவுவதாகும். இது இந்தியாவில் மிகவும் உதவியாக இருக்கும். டெவலப்பர்கள் சமீபத்தில் 'ஜங்ஷன் வியூ' எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தினர். இது முன்கூட்டியே வாகன ஓட்டுநர்களுக்கு சந்திப்புகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து அறிய உதவுகிறது.

Waze Navigation and Live Traffic

Waze Navigation செயலியில் போக்குவரத்து நெரிசல், போலீஸ் எச்சரிக்கைகள், ஆபத்தான பகுதி எச்சரிக்கைகள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியள்ளது. நேரலை ட்ராஃபிக் தரவின் அடிப்படையில் ETA உடன் போக்குவரத்தைக் கண்டறிந்தால், ஆப்ஸ் உடனடியாக வழிகளை மாற்றுகிறது. இது வெவ்வேறு பயனர்களிடமிருந்து தரவைச் சேகரிக்கிறது மற்றும் விரைவான, பாதுகாப்பான மற்றும் மிகவும் திறமையான வழியை வழங்க அதைப் பயன்படுத்துகிறது.

publive-image

மேலும், Waze ஆப் பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்தும் எரிவாயுவின் விலையின் குறித்தும் அறிய உதவுகிறது. எளிய user interface-யை கொண்டுள்ளது.

Sygic GPS Navigation and Maps

கூகுள் மேப்ஸுக்கு சிறந்த மாற்று வழங்குவதில் சிஜிக் ஆப்மும் ஒன்றாகும். உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. நெட் வசதி இல்லாமல் ஆஃப்லைன் முறையில் 3D maps டவுன்லோடு செய்ய உதவுகிறது. நெட் இல்லாமலேயே ஆப் பயன்படுத்தலாம்.

கூகுள் மேப்ஸைப் போலவே, ட்ராஃபிக் பற்றிய நிகழ்நேரத் தகவல் முதல் குரல் வழிகாட்டுதல், வேக வரம்பு எச்சரிக்கைகள் மற்றும் பார்க்கிங் ஸ்பாட் பரிந்துரைகள் வரை உங்களுக்குத் தேவையான அனைத்தையும் Sygic வழங்குகிறது.

publive-image

Sygic வழங்கும் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, காரின் கண்ணாடியில் ஹெட்-அப் டிஸ்ப்ளேவை முன்வைக்கும் திறன் ஆகும். இது கூகுள் மேப்ஸுடன் ஒப்பிடும்போது இரவில் வாகனம் ஓட்டுவதை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக உள்ளது.

'ரியல் வியூ நேவிகேஷன்' எனப்படும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான அம்சம், சரியான பாதையில் செல்ல உதவும் டைனமிக் லேன் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இந்த செயலியில் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment