கூகுள் மேப்ஸ் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வளாகத்தின் நுழைவு வாயில் முதல் நீங்கள் செல்ல வேண்டி கட்டிடம் வரை (entrances to buildings) துல்லியமாக வழிகாட்டும் வகையில் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
இந்த வசதி மூலம் கட்டிடத்தை நீங்கள் செலக்ட் செய்யும் போது மேப்ஸ் ஜூம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். அதோடு நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் மேப்ஸ் பக்கத்தில் ரெட் நிறத்தில் காண்பிக்கப்படும். இது பயனர்கள் எளிதாக பயன்படுத்த வழிவகுக்கும்.
இந்த அம்சம் குறிப்பாக பெரிய கட்டிடங்கள் உள்ள இடம், காலேஜ் கட்டிடம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுயாக இருக்கும். சிறிய கட்டிடங்களுக்கு இந்த அம்சம் முழுமையாக பயன்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது இந்த அம்சத்தின் முழு பலன்களைப் பற்றி அறிய முடியும். விரைவில் இதுகுறித்து கூகுள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“