கூகுள் மேப்ஸில் ‘கிளன்சபிள் டைரக்ஷன்ஸ்’ (Glanceable Directions) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் உங்கள் போன் லாக் செய்தாலும் மேப்ஸ் வசதியை பயன்படுத்தலாம். கூகுள் மேப்ஸ் ஆன் செய்த பின் ஒவ்வொரு முறையும் போன் அன்லாக் செய்து வழிகளைப் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இந்த அம்சம் மூலம் அது எளிதாகிவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனம் இதுகுறித்து அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தில் மேப்ஸில் பயனர்கள் ‘ஸ்டார்ட்’ பட்டன் கொடுக்காமலேயே Route overview பார்க்க முடியும். பயனர்கள் தங்கள் வழியில் உள்ள பாதையை சரிபார்க்க முடியும் என்பதால் இது மிகவும் உதவியாக இருக்கும்.
‘கிளன்சபிள் டைரக்ஷன்ஸ்’ எப்படி எனெபிள் செய்வது?
1. கிளன்சபிள் டைரக்ஷன்ஸ் அம்சம் எனெபிள் செய்ய முதலில் உங்கள் போனில் கூகுள் மேப்ஸ் அம்சம் ஓபன் செய்து உங்கள் வலப்புறத்தில் உள்ள profile icon பக்கம் செல்லவும்.
2. அங்கு செட்டிங்க்ஸ் ஆப்ஷன் கிளிக் செய்து ‘Navigation Settings’ கொடுக்கவும்.
3. அடுத்து கொஞ்சம் கீழே Scroll செய்தால் ‘Glanceable directions while navigating’ என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
4. இப்போது இந்த அம்சம் எனெபிள் செய்யப்படும். இதன் மூலம் நீங்கள் கூகுள் மேப்ஸ் ஆன் செய்து விட்டு போன் லாக் செய்தே வழிகளை பார்க்கலாம். முன்பு போல் கூகுள் மேப்ஸில் வழிகளை காண ஒவ்வொரு முறையும் போன் அன்லாக் செய்ய வேண்டிதில்லை. இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“