Advertisment

இனி வாட்ஸ்அப் தேவையில்லை, கூகுள் மேப்ஸில் அந்த வசதி வந்தாச்சு!

வாட்ஸ்அப்-ல் இருப்பது போன்று கூகுள் மேப்ஸ் செயலிலேயே லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு Estimated time of arrival என்பதையும் கூகுள் மேப்ஸ் புது வசதி காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Google Maps .jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கூகுள் மேப்ஸ் செயலி உலகம் முழுவதும் உள்ள மில்லியன்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த செயலி தற்போது புதிய வசதிகளைப் பெற்றுள்ளது. அதுவும் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். 

Advertisment

அதாவது, கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தே மற்றவர்களுக்கு உங்களுடைய லைவ் லொகேஷனை ஷேர் செய்யலாம். வாட்ஸ்அப், டெலிகிராமில் இருப்பது போலவே இதிலும் எளிதாக  லைவ் லொகேஷன் ஷேர் செய்யலாம். எவ்வளவு நேரம் ஷேர் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். அதோடு, உங்களுடைய Estimated time of arrival-யும்  கூகுள் மேப்ஸ் புது வசதி காட்டுகிறது. 

கூகுள் மேப்ஸில் லைவ் லொகேஷன் எப்படி பயன்படுத்துவது?

1. லைவ் லொகேஷன் பகிர, உங்கள் போனில் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள  profile ஐகானை கிளிக் செய்யவும். 

2. இப்போது அங்கு இருக்கும் ‘Location Sharing’  ஆப்ஷனை கிளிக் செய்து ‘Share Location’ பட்டனை கிளிக் செய்யவும். 

3.  இப்போது புதிய பக்கம் ஓபன் ஆகும் அதில் எவ்வளவு நேரம் ஷேர் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். அடுத்து அந்த லிங்கை பகிரலாம். 

நீங்கள் லைவ் லொகேஷன் ஷேரிங் பகிர்வதை நிறுத்த வேண்டும் என்றால் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து ‘Sharing via link option’ என்பதை கிளிக் செய்து ‘Stop’ பட்டனை கொடுக்கவும். அவ்வளவு தான். 

மேலும், வாட்ஸ்அப், டெலிகிராம் செயலி போல் அல்லாமல் கூகுள் மேப்ஸில் லைவ் லொகேஷன் பகிரும் போது மற்ற பிற செயலிக்கும் நீங்கள் பகிரலாம். வாட்ஸ்அப், டெலிகிராமில் மேப் பயன்படுத்தினால் அதில் உள்ளே மட்டுமே பகிர முடியும்.  கூகுள் மேப்ஸில்  உங்கள் Location History’ ஆப் செய்யப்பட்டிருந்தால் லைவ் லொகேஷன்

பகிர முடியும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Google Maps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment