/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-18T162214.720.jpg)
google maps, google maps offline, download google maps offline, download google maps, how to use google maps, how to use google maps without internet
நீங்கள் ஒரு புதிய பகுதியில் இருக்கும் போது கூகுள் மேப்ஸ் உங்களுக்கு எப்போதும் எளிதாக உதவும். இது பலவித அம்சங்களுடன் வருவதால் ஒரு வரைபடத்தை விட அதிகமாக பயன் தருகிறது. இதில் உள்ள மற்றொரு அம்சம் ‘Google Maps Offline’. குறிப்பாக நீங்கள் இணையதள வசதி இல்லாத ஒரு பகுதிக்கு செல்ல திட்டமிடும் போது அல்லது கைபேசி டேட்டாவை பயன்படுத்த வேண்டாம் என நினைக்கும் போது இது மேப்ஸின் பயன்பாட்டினை அதிகரிக்கிறது.
ஆப்லைன் பயன்பாட்டுக்கான கூகுள் மேப்ஸ்’ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
ஒரு வரைபடத்தை (map) பதிவிறக்கம் செய்ய உங்கள் கைபேசியில் உள்ள கூகுள் மேப்ஸ் ஆப்பிற்கு செல்லவும் அது Android அல்லது iOS எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. திரையின் இடது மேல் மூலையில் உள்ள hamburger menu icon ஐ சொடுக்கி ‘Offline maps’ என்பதை தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக Android புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் இந்த மெனு மேல் வலது மூலையில் search bar அருகில் User Profile Picture பக்கம் மாற்றப்பட்டுள்ளது.
இப்போது நீங்கள் ஆப்லைன் மேப்ஸ் ல் இருக்கிறீர்கள், திரையில் உள்ள ‘Select Your Own Map’ ஐ சொடுக்கவும். அது ஒரு நீல பெட்டியுடன் கூடிய வரைபடத்தை திறக்கும். அந்த வரைபடத்தில் zoom out மற்றும் scroll over செய்து பதிவிறக்கம் செய்ய தேவையான பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் தேடுதல் வசதி இல்லாததால் நீங்கள் விரும்பும் பகுதியை தேர்ந்தெடுக்க இது தான் ஒரே வழி.
கூகுள் மேப்ஸ் தொடர்பாக நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய பகுதியை தேர்ந்தெடுத்த உடனே, நீங்கள் அநத வரைபடத்தை ஆப்லைன் பயன்பாட்டுக்காக சேமிக்க எவ்வளவு டேட்டா செலவாகும் என்பதை அது காண்பிக்கும். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அடுத்து கீழ் பகுதியில் உள்ள ‘Download’ பட்டனை சொடுக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.