கூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்!

நேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும். 

By: Published: June 7, 2019, 11:07:36 AM

Google Maps Navigation Speedometer : கூகுள் நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த செயலிகளையும், அப்டேட்களையும் வழங்குவது வழக்கம். ஆண்ட்ராய்டும் கூகுளும் மக்களின் வாழ்க்கையை அடுத்த தளத்திற்கு எடுத்துச்  சென்றுள்ளது என்றால் அதற்கு மறுப்பே இல்லை.  தற்போது கூகுள் மேப்பிலும் புதிய அப்டேடுகள் வெளியாகியுள்ளன.

Google Maps Navigation Speedometer

வேஸ் (Waze) நிறுவனத்திடம் இருந்து சில சிறப்பம்சங்களை பெற்று ஸ்பீட் கேமரா, ஸ்பீட் ட்ராப்கள் போன்ற வசதிகளை கூகுள் மேப்பில் இணைத்திருந்தது கூகுள். தற்போது புதிதாக ஸ்பீடோ மீட்டரைய்யும் கூகுள் மேப்பில் இணைத்துள்ளது.

நேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.  குறிப்பிட்ட வேகத்தை தாண்டி நீங்கள் வாகனங்களை ஓட்ட ஆரம்பித்தால் உங்களை எச்சரிக்க ஆரம்பித்துவிடும்.

தற்போது அமெரிக்கா, பெல்ஜியம், இங்கிலாந்து, ப்ரேசில் போன்று நாடுகளில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மிக விரைவில் இந்த அப்டேட் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.  நீங்கள் உங்களின் கூகுள் மேப்பில் இருக்கும் நேவிகேசனை செக் செய்து உங்கள் பகுதியில் புதிய அப்டேட் வந்துள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : சென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Google maps navigation speedometer new updates available in uk usa brazil and belgium

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X