scorecardresearch

இருப்பிடங்களை அறிய மட்டும் அல்ல Google Maps… அதுக்கும் மேல!

புதிய உணவகத்திற்குச் செல்வதற்கு முன்பு அல்லது ஓர் இடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பு , இவர்கள் சார்ந்திருக்கும் 120 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களைப் பற்றி மிகச் சிலருக்கே தெரிந்திருக்கும்.

இருப்பிடங்களை அறிய மட்டும் அல்ல Google Maps… அதுக்கும் மேல!
Google Maps is the next biggest content platform

Google Maps Tamil News: நீண்ட காலமாக, ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கும், திசைகளைத் தேடுவதற்கும், ஓர் இடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பு அதன் ரிவ்யூக்களை தெரிந்துகொள்வதற்கும் முதன்மை செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. அதன் பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களுக்கு இது ஒரு இன்றியமையாத செயலி என்றே சொல்லலாம். ஆனால், அடுத்த பெரிய உள்ளடக்கத் தளமாக மாறுவதற்கான அதன் திறனைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

கூகுள் மேப்ஸ் பயனர்களின் எண்ணிக்கைப் பற்றிய தரவு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது என்றாலும், ஓர் புதிய உணவகத்திற்குச் செல்வதற்கு முன்பு அல்லது ஓர் இடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பு , இவர்கள் சார்ந்திருக்கும் 120 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களைப் பற்றி மிகச் சிலருக்கே தெரிந்திருக்கும்.

கூகுள் மேப்ஸில் நீங்கள் காணும் ஒவ்வொரு ரிவ்யூ அல்லது புகைப்படமும் ரெடிட், ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடக தளங்களைப் போலவே உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்தான். இணையத்தில் இதன் ரிவ்யூக்கள் மற்றும் புகைப்படங்கள் மில்லியன் கணக்கான பயனர்களால் பார்க்கப்படுகின்றன. ரெடிட்டைப் போலவே, கூகுளும் ஓர் மையப் புள்ளி அமைப்பைக் கொண்டிருக்கிறது. எனவே, ரிவ்யூக்களையும் புகைப்படங்களையும் பதிவிடுவதன் மூலம் அதற்கான புள்ளிகளை பயனர்கள் பெறுவார்கள். ரெடிட்டைப் போல் இல்லாமல், எழுதப்பட்ட ரிவ்யூக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இதன் அளவு மதிப்பிடப்படுகிறது. பயனர் பேட்ஜ்களை பெரும் வரை இந்த புள்ளிகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. பின்னர், அவர்களின் ரிவ்யூக்களுக்கான மதிப்புரை மேலே காட்டப்படும்.

ஓர் வெற்றிகரமான உள்ளடக்க அடிப்படையிலான தளம் அதனை உபயோகப்படுத்தும் பயனருக்கு மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது:அனைவராலும் பார்க்கக்கூடிய வசதி அதாவது விசிபிலிட்டி (Visibility), உரிமை மற்றும் இழப்பீடு. யூடியூப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்கள் பயனர்களுக்கு அவர்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கான விசிபிலிட்டியை வழங்குகிறது. இழப்பீடு என்பது பணம் அல்லது விசிபிலிட்டி மற்றும் இலக்கை அடைவதாக இருக்கலாம்.
ஆரம்பத்தில், கூகுள் மேப்ஸ் இங்குதான் தடுமாறியது. ஓர் பயனர் தங்களின் ரிவ்யூக்களுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை குவித்தாலும், மற்ற பயனர்களுக்கு அவர்கள் யார் என்பது தெரியாது. ஆனால், இந்த சிக்கலை விரைவாகக் கையாண்டதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘மேப்ஸ் ப்ரோஃபைல்ஸ-ஐ(Maps profiles)’ வெளியிட்டது கூகுள். இந்த அப்டேட்டின் மூலம், பயனர்கள் பங்களிப்பாளர்களைப் பின்தொடரலாம், அவர்களின் ரிவ்யூக்களை காணலாம் மற்றும் அவர்களின் உள்ளடக்கத்தை விரிவாகப் பார்க்கலாம்.

எந்தவொரு உள்ளடக்க உருவாக்கத் தளத்திலும், மக்கள் தங்களுக்குப் பிடித்த படைப்பாளியின் அடுத்த காணொளி, கட்டுரை, ஆல்பம் போன்றவற்றைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். கூகுள் மேப்பிங் தளத்தில், உள்ளூர் பரிந்துரைகளைப் பெறுவது மிகவும் எளிது. படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்கள் நீண்ட நாள்களாகக் கேட்கும் கேள்விக்கான பதிலாகவே இது இருக்கிறது.

மானிடைசேஷன் (monetisation) பொறுத்தவரை, ​​யூடியூப் ஆண்டுக்கு சுமார் 15.5 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது. மேலும் இது உள்ளடக்கப் படைப்பாளர்களுக்குப் பணம் செலுத்தும் ஒரு அமைப்பையும் கொண்டுள்ளது. மறுபுறம் விளம்பரங்களிலிருந்து 3.5 பில்லியன் டாலர்களை கூகுள் மேப்ஸ் ஈட்டுகிறது. இந்த தளத்திலுள்ள பங்களிப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பண ரீதியாக வெகுமதி பெறத் தொடங்கினால், ரிவ்யூக்கள் மற்றும் படங்களின் தரம் உயரும். உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு ஆதரவாகத் தளத்தை மாற்றவும் இது உதவும்.

யூசர் இன்டர்ஃபேஸ் (user interface) மற்றும் பங்களிப்பு அமைப்பில் மாற்றங்களைச் செய்வதில், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேப்ஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள் பயனர் உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியை நோக்கிச் செல்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நகரங்களையும் சுற்றுப்புறங்களையும் ஆராய்வதற்கு இந்தத் தளம் வழங்கும் வசதி மிகப்பெரியது.

கூகுள் மேப்ஸ் இயங்குதளம் பயனர்களுக்கு தங்கள் தளத்தில் வரைபடத்தைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை மட்டும் வழங்கவில்லை, டெவலப்பர் சமூகங்களையும் ஊக்குவிக்கிறது. மேலும், அனைத்து அளவிலான வணிகங்களுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான திட்டங்களை ஆதரிக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் கிரியேட்டிவ் பார்ட்னர்களுக்கு நல்ல சுற்றுச்சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது.
கூகுள் மேப்ஸ் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தைக்கொண்ட பயன்பாட்டுக் கருவியாக இருந்து தற்போது முழு அளவிலான உள்ளடக்கத்தை உருவாக்கும் தளத்திற்கு மாறுவதற்கான சரியான நிலையில் உள்ளது. இந்தத் தளத்தில் உள்ளவர்களும் ரிவ்யூக்களை எழுதுவதற்குக் கணிசமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரை, இது உலகத்தின் நேரடி செய்தித்தாள். உள்ளடக்கப் படைப்பாளர்களும் பங்களிப்பாளர்களும் இதுபோன்று ஆழமான தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வது தங்களுக்கு அதிகமான பொருள் நன்மைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Google maps tamil news how google maps is the next biggest content platform

Best of Express