கூகுள் மேப்பில் இத்தனை விசயம் இருக்குதா?

6 Google Maps Tips and Tricks You Should Know : ஸோமாட்டோ & டைன்அவுட் உணவகங்களை தேடும் சேவைகளை வழங்குவதற்கு முன்பே கூகுள் மேப் இந்த சேவையை வழங்கியது

Google Maps Tips Tricks, 5 Google Maps tricks
Google Maps Tips Tricks

6 Google Maps Tips tricks you need to know : கூகுள் மேப் பயன்பாட்டிற்கு வந்த பின்பு நாம் துணிந்து முன் பின் தெரியாத இடங்களுக்கும் தைரியமாக செல்கின்றோம். அது வெறும் டிஜிட்டல் மேப்பாக மட்டும் இல்லாமல் பயனாளிகளுக்கு பல்வேறு முக்கிய அம்சங்களை அது வழங்குகிறது. கூகுள் வரைபடம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 6 ட்ரிக்குகள் உங்களுக்காக இதோ!

Commute

கூகுள் மேப்பில் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் முகவரியை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதன் பின்பு நீங்கள் கூகுள் மேப்பின் கீழே இருக்கும் Commute என்ற டேப்பை க்ளிக் செய்தால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியையும், ட்ராஃபிக் குறித்தும், மாற்று வழி குறித்தும் உங்களுக்கு தெளிவான ஐடியாவை தருகிறது. எனவே நீங்கள் அதற்கு ஏற்றது போல் உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Share your live location

உங்களின் வருகை அல்லது நீங்கள் தற்போது எங்கே இருக்கின்றீர்கள் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிக்க இந்த ஆப்சன் உதவிகரமாக இருக்கும். நீங்கள் இந்த தகவலை வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகள் வழியே அனுப்பிக் கொள்ளலாம்.  நீங்கள் இருக்கின்ற இடத்தை காட்டும் நீல நிற புள்ளியை க்ளிக் செய்து, Share your live location மூலமாக இதனை நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.

 Google Maps Tips and Tricks

Share places and addresses on the map

நீங்கள் பயணிக்கும் இடம் குறித்த அப்டேட்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவிக்கலாம். அந்த இடம் எங்கே இருக்கிறது. அதனை சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது என்பது குறித்து அனைவராலும் அறிந்து கொள்ள இயலும். ஷேர் ப்ளேசஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் எந்த செயலி வழியாக அந்த தகவல்களை அனுப்ப விரும்புகின்றீர்களோ அதன் வழியே அனுப்பிக் கொள்ளலாம்.

 Google Maps Tips and Tricks

Save a place

நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள், ஒரு பயணித்தின் போது எத்தனை இடங்களை பார்க்க விரும்புகின்றீர்கள் என்பது குறித்து அனைத்து திட்டங்களையும் நீங்கள் முன்பே தயாரித்து கொள்ள உதவுகிறது இந்த ஆப்சன். நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் மேப் பக்கத்தில் ‘Save’ ஆப்சன் இருக்கும். அதில் சென்று ‘Starred places’, ‘Want to go’, ‘Favourites’ என்ற மூன்று ஆப்சன்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

 Google Maps Tips and Tricks
Google Maps Tips and Tricks

Explore restaurants, petrol pumps, ATMs

கூகுள் மேப்பில் உங்களால் விரைவாக ஏ.டி.எம் சேவைகள், பெட்ரோல் நிலையங்கள், மற்றும் உணவகங்களை கண்டறிந்து கொள்ள முடியும். மிகவும் அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் வங்கிகள், மருத்துவமனைகளையும் நீங்கள் கூகுள் மேப் மூலமாக கண்டு பிடிக்க இயலும். ஸோமாட்டோ மற்றும் டைன்அவுட் போன்ற நிறுவனங்கள் உணவகங்களை தேடும் சேவைகளை வழங்குவதற்கு முன்பே கூகுள் மேப் இந்த சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

For you

இந்த வசதி மூலம் உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கான இடங்களை காட்டும். லோக்கல் கைடுகள் ஒரு இடம் குறித்து அறிவிக்கும் கருத்துகளையும் நீங்கள் இங்கு படித்து அறிந்து கொள்ளலாம்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google maps tips tricks need know

Next Story
ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ஜியோ டேரிஃப் கட்டணங்களும் அதிகரிக்கிறது!tarrif hike, latest prepaid plans, Reliance Jio vs Airtel vs Vodafone New Prepaid Plans
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com