கூகுள் மேப்பில் இருக்கும் மிக முக்கியமான 3 அம்சங்கள்... இக்கட்டான காலங்களில் நிச்சயம் உதவும்

Google Maps New Features: இந்த மூன்று அப்டேட்களும் உங்களின் கூகுள் மேப் அனுபவத்தையே மாற்றிவிடும்.

Google Maps New Features 2019  : கூகுள் மேப் இன்று நாம் செல்லும் பயணத்தை மிக எளிமையானதாகவும், குழப்பம் இல்லாததாகவும் மாற்றிவிட்டது என்று கூறினால் அது உண்மை தான். அதற்கு உங்களிடமோ என்னிடமோ மாற்றுக் கருத்தே இருக்காது. மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்ட கூகுள் நிறுவனம்,  நமக்கு தேவையான பல்வேறு புதிய வசதிகளை அதில் உருவாக்கி வருகிறது.

Google Maps latest update : AR

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூகுள் பிக்சல் போன்களில் இந்த வசதியை உருவாக்கித் தந்தது கூகுள் மேப். இந்த மோடில், நீங்கள் ஒரு சாலையை நேரில் எப்படி காண்பீர்களோ அதே போன்று போன்களின் கேமரா ஃபீட்கள் மூலம், உண்மையான சாலையை மேப்பில் பார்க்க இயலும். தேவையில்லாமல் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக உங்களின் பயணம் இருக்காது. traditional navigation button – க்கு மிக அருகில் இதற்கான பட்டனை க்ளிக் செய்து நீங்கள் ஆகுமெண்டட் ரியாலிட்டியில் மேப்பை காணலாம். ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ’மூவ்’ ஆகிக் கொண்டிருக்கும் போது தான் இந்த ஆப்சனை உங்களால் பெற இயலும்.

சிறந்த உணவுகளை பட்டியலிடும் கூகுள் மேப்

தற்போது நீங்கள் ஏதாவது உணவகங்களில் உணவு சாப்பிட செல்கின்றீர்கள் என்றால், அந்த உணவகத்தின் சிறந்த உணவுகள் எது என்பதை, அங்கு வரும் வாடிக்கையாளர்களின் ரிவியூ மூலமாக எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கூகுள் புதிய அப்டேட்களை தந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ள நிலையில் ஆப்பிள் போன்களில் இனிமேல் தான் இந்த அப்டேட் வர போகிறது.

ட்ராஃபிக் அப்டேட் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு

நீங்கள் செல்லும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல், எவ்வளவு நேரத்தில் நீங்கள் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலும் போன்ற விசயங்களை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் அறிவிக்கிறது. இதனால் உங்களின் பயணத்தை மிக வேகமாகவும், முன்கூட்டியேவும் திட்டமிட இயலும்.

இந்த விலை வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகுமா? இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி நோட் 10

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close