கூகுள் மேப்ஸ் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க மற்றொரு அம்சத்தை அறிமுகம் செய்கிறது. கூகுள் நிறுவனம் பயனர்களின் லொக்கேஷன் டேட்டாவை கையாள்வதில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இப்போது வரை கூகுள் மேப்ஸ் பயனர்களின் லொக்கேஷன் ஹிஸ்டரியை அதன் சர்வரின் ஸ்டோர் செய்து வருகிறது, தற்போது கொண்டு வரும் ஆப்ஷன் மூலம் பயனர்கள் லொக்கேஷன் ஹிஸ்டரி கூகுள் சர்வரில் அல்லாமல் அவர்களின் மொபைல் போனில் ஸ்டோர் செய்யப்படும். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு லொக்கேஷன் ஹிஸ்டரி என்ற பெயர் மாற்றப்பட்டு டைம்லைன் (Timeline) என்ற வசதி இடம்பெறும் எனவும் கூறியுள்ளது. இந்த வசதி இந்தாண்டு டிசம்பர் 1-க்குள் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள், எந்த இடம் செல்லத் தேடுனீர்கள் உள்பட அனைத்து தகவலும் உங்கள் போனில் மட்டுமே சேமிக்கப்படும். டேட்டவை மேலும் பாதுகாக்க, டைம்லைன் வசதி என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்அப் வழங்கப்படும் என நிறுவனம் கூறியது. இந்த கேக்அப் வசதி வழங்குவதால் பயனர் வேறு மொபைலுக்கு மாறினாலும் டேட்டவை திரும்ப பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“