கூகுள் மீட் புதிய அப்டேட் அறிமுகம்: இனி ஹெச்.டி வீடியோ ஸ்ட்ரீம் செய்யலாம்

Google Meet: கூகுள் மீட் வெர்க்ஸ்பேஸ் (Workspace) பயனர்களுக்கு ஹெச்.டி வீடியோ (Full HD) ஸ்ட்ரீம் அம்சத்தை வழங்கியுள்ளது.

Google Meet: கூகுள் மீட் வெர்க்ஸ்பேஸ் (Workspace) பயனர்களுக்கு ஹெச்.டி வீடியோ (Full HD) ஸ்ட்ரீம் அம்சத்தை வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
GMeet.jpg

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீட், தனது வீடியோ கான்பரன்சிங் ஆப்-க்கு புதிய வசதியை சேர்த்துள்ளது. அதாவது 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் இணைந்து குரூப் கால் பேசுகிறீர்கள் என்றால் Full HD தரத்தில் பயன்படுத்தலாம். ஆனால் இது அனைவருக்கும் இல்லை. வெர்க்ஸ்பேஸ் (Workspace) சந்தா பயனர்களுக்கு  மட்டும் வழங்கப்படுகிறது. தற்போது இது வெப் வெர்ஷனில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கூகுள் கூறுகையில், தற்போது இந்த Full HD வசதி default வசதியாக சேர்க்கப்படவில்லை. ஏனெனில் இதற்கு 1080p கேமரா தேவைப்படுகிறது. இருப்பினும் நீங்கள் on-screen prompt  அல்லது செட்டிங்ஸ் மெனு சென்று ஆன் செய்யலாம். மீட்டிங்கில் பங்கேற்பாளர்கள் பின் செய்யப்பட்டிருந்தால் அல்லது பார்வையாளர்கள் வீடியோ தரத்தை ஆதரிக்கும் திரையை வைத்திருந்தால் மட்டுமே மற்றவர்களை முழு HD இல் பார்க்க முடியும் என்று கூறியுள்ளது. 

மேலும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், இந்த அம்சம் பயன்படுத்தும் போது உங்கள் இன்டர்நெட் சரியாக வேலைசெய்ய வேண்டும். இன்டர்நெட் ஸ்லோவாக இருந்தால் கூகுள் மீட் செயலியே தானாக பேண்ட்வித்தை மாற்றிக் கொள்ளும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment
Advertisements
Google

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: