/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project63.jpg)
கூகுள் தனது சைன்-இன் பக்கத்திற்கு (sign-in page) புதிய லுக் கொடுத்துள்ளது. பழைய சைன்-இன் பக்கத்தை நீக்க மார்டன் லுக் கொடுத்துள்ளது. இது பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், ரீப்ராஸின் நடைமுறையாகவும் கூகுள் இதை செய்துள்ளது.
இது மொபைல், வெப் வெர்ஷன் இரண்டிலும் அறிமுகம் செய்துள்ளது. நேற்று (பிப்.21) முதல் இந்த அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சைன்-இன் பக்கம் கூகுளின் அனைத்து வித பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. Google Workspace பயனர்கள் முதல் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
எவ்வித மாற்றங்களும் செய்யப்படத் தேவையில்லை. இந்த இன்டர்பேஸ் தானாகவே போன், வெப்பில் அப்டேட் ஆகி விடும். கூகுள் கூறுகையில், இந்த அம்சம் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வழங்க 15 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது.
புதிய பக்கம் எப்படி இருக்கும்?
புதிய சைன்-இன் பக்கத்தில் குறைந்த டிசைன், landscape orientation மற்றும் நடுவில் பெரிய கூகுள் லோகோ இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அக்கவுண்ட் தொடங்குவதற்கான படிவம் வலப்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு password recover ஆப்ஷனும் உள்ளது.
ஏன் இந்த புதிய மாற்றம் ?
கூகுளின் கூற்றுப் படி, மெட்டீரியல் டிசைன் மொழியைப் பயன்படுத்த இது கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு பயனர் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டீரியல் டிசைன் மொழி என்பது நிறம், வடிவம், typography, and animations பயன்படுத்தி டிசைன் உருவாக்குவதாகும். கூகுள் இதை தனது மற்ற ஆப்களிலும் பயன்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.