கூகுள் சர்ச் (Google Search) உங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த புதிதாக ‘Speaking Practice’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் சர்ச் லேப்ஸ் ஆப்ஷனில் தற்போது, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய அம்சம் பயனர்களை AI-இயக்கப்படும் language learning exercises மூலம் பயன்படுத்த முடியும் என்று தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் அன்றாட சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள உதவும்.
இந்த புதிய வசதியை ஓபன் செய்யும் போது முதலில் உங்களிடம் கேள்வி கேட்கும் இதன் பின் அந்த வசதியில் உள்ள ப்ரீ-டிவைன்ட் வார்த்தைகள் (predefined set of words) மூலம் நீங்கள் பதில் அளித்து அந்த அம்சத்தை பயன்படுத்தலாம். உங்கள் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ள இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது கூகுள் சர்ச் பக்கத்தின் டாப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
New Speaking Practice வசதியை பயபடுத்த உங்கள் போனில் கூகுள் ஆப் ஓபன் செய்து, வலப்புறத்தில் உள்ள லேப்ஸ் ஐகான் கிளிக் செய்தால் இந்த அம்சம் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“