கூகுள் நிறுவனம், தனது யூடியூப் பிரீமியம் வசதியை மூன்று மாதங்களுக்கு மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இந்த வசதியின் மூலம், மாணவர்கள் யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு கட்டணமின்றி காண முடியும். அதற்கு பிறகு, மாதத்திற்கு ரூ.496 வசூலிக்கப்படும்.
கூகுள், இந்த வசதியை தனது யூடியூப் மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர் என்பதை எதை வைத்து கூகுள் உறுதி செய்கிறது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.
இந்த இலவச வசதியை பெற, மாணவர்களின் முதலில் ரூ.496 எனும் மாத தவணை திட்டத்தில் Sign up செய்ய வேண்டும். இதில், தான் யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் ஆகிய இரு அம்சங்களும் கிடைக்கும். Sign up செய்த பிறகு, அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச மாதிரி செயல்பாடு தொடங்கும்.
இந்த யூடியூப் பிரீமியம் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் அனைத்து யூடியூப் வீடியோக்களையும் டவுன்லோட் செய்ய முடியும், விளம்பரங்களை நீக்கலாம் மற்றும் யூடியூபின் அனைத்து நிகழ்ச்சிகளையும் காண முடியும்.
யூடியூப் மியூசிக் பிரீமியம் என்பது, அந்நிறுவனத்தின் சொந்த இசை வழங்கும் சேவையாகும். இதன் மூலம், பயனர்கள் பாடல்கள் டவுன்லோட் செய்யலாம், பிளே லிஸ்ட் உருவாக்கிக் கொள்ளலாம். பின்னணி இசை உட்பட பல வசதிகளை பெறலாம்.