Google One Cloud Storage Plan Tamil News : சில வாரங்களுக்கு முன்பு, கூகுள் தனது அன்லிமிடெட் சேமிப்புக் கொள்கையை மாற்றப்போவதாக அறிவித்தது. கூகுள் புகைப்படங்கள் பயன்பாட்டுப் பயனர்கள் ஜூன் 1, 2021 முதல் இலவச வரம்பற்ற காப்புப்பிரதிகளைப் பெற மாட்டார்கள். நிறுவனம் தற்போது ஜிமெயில், டிரைவ், டாக்ஸ் மற்றும் புகைப்படங்களுக்காக மொத்தம் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. எனவே, நீங்கள் வரம்பை மீறினால், கூகுள் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த கூகுள் ஒன் திட்டத்தை வாங்க வேண்டும். அதிகமான மக்கள் விரைவில் க்ளவுட் ஸ்டோரேஜ் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூகுள் ஒன் அதிக சேமிப்பு திட்டங்களுக்காக இந்தியாவில் குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.
“அதிக இடம் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு, எங்கள் 10 TB, 20 TB மற்றும் 30 TB திட்டங்களின் விலையை 50% குறைக்கிறோம். நீங்கள் ஏற்கெனவே ஒரு தகுதித் திட்டத்தில் இருந்தால், சேமிப்புகளைத் தானாகவே பார்க்கத் தொடங்குவீர்கள்” என்று கூகுள் கூறியது.
கூகுள் ஒன்: புதிய இந்தியா விலைகள்
10TB-க்கு, ஒரு மாதத்திற்கான சந்தா ரூ.3,250 செலவாகும். இந்த திட்டம் பொதுவாக மாதத்திற்கு ரூ.6,500 வரை செலவாகும். 20TB சேமிப்புத் திட்டம் மாதத்திற்கு, ரூ.13,000 விலையிலிருந்து ரூ.6,000-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 30TB திட்டத்தில் மாதத்திற்கு ரூ.19,500 விலையிலிருந்து மாதத்திற்கு ரூ.9,750 குறைக்கப்பட்டிருக்கிறது.
வழங்கப்பட்ட க்ளவுட் சேமிப்பகம், ஜிமெயில், கூகுள் புகைப்படங்கள், ட்ரைவ் மற்றும் பணியிட எடிட்டிங் பயன்பாடுகளை உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க. க்ளவுட் சேமிப்பகத்தைத் தவிர, கூகுள் நிபுணர்களுக்கான அணுகல் மற்றும் கூடுதல் உறுப்பினர் நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள் என்று கூகுள் கூறுகிறது. மேலும், மற்ற சேமிப்பக திட்டங்களுக்கான விலைகளை மாற்றவில்லை.
கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா உங்களுக்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டு அடிப்படையில் ரூ.1,300 செலவாகும். குறிப்பிடப்பட்ட விலைக்கு, நீங்கள் 100 ஜிபி சேமிப்பு இடத்தைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடனும் சேமிப்பிடத்தைப் பகிர கூகுள் உங்களை அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ஐந்து கூடுதல் குடும்ப உறுப்பினர்களை அழைக்கலாம்.
200 ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜ் இடத்திற்கு, நீங்கள் மாதத்திற்கு ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 செலவிட வேண்டும். 2TB க்ளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதன் விலை மாதத்திற்கு ரூ.650 மற்றும் ஆண்டுக்கு ரூ.6,500.
கூகுள் பயனர்களுக்கு இப்போது கூகுள் ஒன் பயன்பாடு கிடைக்கிறது
கூகுள் ஒன் பயன்பாடு இப்போது iOS பயனர்களுக்கும் கிடைக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. பயன்பாட்டைப் பயன்படுத்தி இப்போது அவர்கள் தொலைபேசியின் புகைப்படங்கள், தொடர்புகள், காலெண்டர்கள் மற்றும் பலவற்றை பேக் அப் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நீங்கள் ஆண்ட்டிராய்டு மற்றும் iOS சாதனம் இரண்டையும் சொந்தமாக வைத்திருந்தால், உங்கள் எல்லா தரவும் சிங்க் செய்யப்படும். அவற்றை ஒரே இடத்தில் காணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"