Advertisment

7 ஸ்டாம்புகளை கலெக்ட் செய்தால் ரூ.2020... யார் யாரெல்லாம் விளையாட ரெடி?

Google Pay Welcome 2020 Stamps : இந்த கேக் லேயர்களை நீங்கள் வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google Pay 2020 Stamps, Google Pay 2020 Stamps, Google Pay New Stamps

Google Pay 2020 Stamps

Collect Google Pay 2020 Stamps :   2020ம் ஆண்டினை சிறப்பாக துவங்கும் வண்ணமாக கூகுள் பே ஒரு சிறப்பான சலுகை ஒன்றை கொடுத்துள்ளது. வெல்கம் 2020 என்று வழங்கப்படும் அந்த சிறப்பு சலுகை என்று பார்ப்போம் வாருங்கள். பலூன், டி.ஜே. சன்க்ளாஸ், பிட்சா, செல்ஃபி, டாஃபி, மற்றும் டிஸ்கோ புகைப்படங்களை கொண்ட 7 ஸ்டாம்ப்புகளை வெளியிட்டுள்ளது. இதனைக் கொண்டு உங்களால் மூன்று கேக் லேயர்களை உருவாக்க இயலும். இந்த ஏழு ஸ்டாம்புகளையும் நீங்கள் கலெக்ட் செய்தால் நீங்கள் ரூ.2020 ரொக்கம் பெறுவதற்கான வாய்ப்பினை பெறுவீர்கள்.

Advertisment

பலூன், டி.ஜே. சன்கிளாஸ் ஆகிய மூன்றும் பாட்டம் லேயர், டாஃபி, செல்ஃபி, பீட்சா ஆகியவை நடுவில் இருக்கும் லேயர். மேலே இருக்கும் லேயரில் டிஸ்கோ ஸ்டாம்ப் இருக்கும். ஏதேனும் ஒரே லேயரை முடித்தாலும் உங்களுக்கு ரொக்கப்பணம் காத்துக் கொண்டிருக்கிறது.

யாருக்காவது பணம் அனுப்புவது, பணம் பெறுவது, மொபைல் ரீசார்ஜ், அல்லது கட்டணங்கள் செலுத்துவது மூலமாக இந்த ஸ்டாம்புகளை நீங்கள் பெறலாம். மேலும் உங்களின் நண்பர்களை கூகுள் பே’வில் இணைப்பதன் மூலமாகவும் உங்களால் ஸ்டாம்புகளை பெற இயலும். இந்த கேக் லேயர்களை நீங்கள் வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கேக்கின் ஒவ்வொரு லேயரையும் கம்ப்ளீட் செய்யும் போது உங்களுக்கு வவுச்சர்கள், கூப்பன்கள், மற்றும் ரிவார்ட்கள் வழங்கி ஆச்சரியமூட்டுகிறது கூகுள் பே.

மேலும் படிக்க : WhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்?

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment