இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்றது தேடிய பொருள் இருக்கிறதா என்பதை பார்ப்பதை காட்டிலும், கூகுள் பே இருக்கிறதா என்பதை தான் தேடுகிறோம். அதேசமயம், அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக கூகுள் பே உள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமதத்தை குறைத்திட, கூகுள் பே நிறுவனம் புதிதாக Tap to Pay வசதியை Pine labs உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதி மூலம், பயனர்கள் இனி ஜஸ்ட் போனை டேப் செய்தாலே போதும், யுபிஐ பின் நம்பர் போடும் திரையில் கொண்டு செல்லப்படுவோம். அதில் PIN நம்பர் டைப் செய்தால் பணம் பரிவர்த்தனை நடைபெறும். பைன் லேப்ஸ் என்பது வணிகர்களுக்கு பணம் செலுத்தும் தீர்வுகளை வழங்கும் வணிக வர்த்தக தளமாகும்.
கூகுள் பே-இல் வரவிருக்கும் புதிய வசதி மூலம், இனி ஒவ்வொரு முறையும் கேமராவை ஒப்பன் செய்து ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களிலும், ஸ்கேன் ஆக நிறைய நேரம் எடுக்கும் சமயத்திலும் பயனர்களுக்கு ஏற்படும் சிரமத்தை புதிய அப்டேட் சரிசெய்துள்ளது. ஆனால் பைன் லேப்ஸ் ஆண்ட்ராய்டு பிஓஎஸ் டெர்மினலைப் பயன்படுத்தும் வணிகருடன் பரிவர்த்தனை செய்யும் போது மட்டுமே இந்த செயல்பாடு வோர்க் ஆகும்.
கூகுள் பே கூற்றுப்படி, இந்த புதிய செயல்பாடு முதலில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், விரிவுப்படுத்தப்பட்டு மற்ற கடைகளுக்கு வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் ஏபிஏசியின் வணிகத் தலைவர் சஜித் சிவானந்தன் வெளியிட்ட அறிக்கையில், " புதிய Tap to Pay ஆப்ஷன், கூட்ட நேரிசல் மிக்க இடங்களில உதவியாக அமைந்திடும். கடைகளில் நீண்ட நேரம் வரசையில் நிற்கையில் இந்த அம்சம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கார்டுகளை காட்டிலும் ஆன்லைன் பெமேண்ட் எளிதாக மாறியுள்ளது. பைன் லேப்ஸுடன் இணைந்து இந்த முதல் கண்டுபிடிப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என பதிவிட்டிருந்தார்.
மார்ச் 8 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி UPI 123Pay ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாட்டில் சாதாரண போன் பயன்படுத்தும் 40 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. UPI 123Pay நான்கு விருப்பங்களில் பணத்தை அனுப்பிட முடிந்தது. செயலி மூலமாகவும், மிஸ்ஸிடு கால் மூலம், ஐவிஆர் மூலமும், சவுண்ட் மூலம் பணத்தை பரிமாற்றிக்கொண்டனர்.
ஏப்ரல் 2016 இல் UPI அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 304 க்கும் மேற்பட்ட வங்கிகள் கணினியில் நேரலையில் உள்ளன. பயனர்கள் 8.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 4.5 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.