scorecardresearch

Google Pay App: உ’பெ’ருடன் கைகோர்க்கும் கூகுள் ‘பே’! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

Google Pay for your Uber India ride: உங்கள் மொபைலில் உள்ள உபெர் ஆப்-ல் Payment Method இருக்கிறது அல்லவா.. அதில், Google Pay ஆப்ஷனை நீங்கள் சேர்க்க வேண்டும்

Google pay FD, Equitas bank

Google Pay App: உபெர் டாக்ஸி பயன்படுத்தும் நபர்களுக்கான புதிய அறிவிப்பு இந்த செய்தி.

அதாவது, கூகுள் நிறுவனம், உபெர் டாக்ஸியுடன் கூட்டணி அமைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி உபெர் டாக்ஸியில் பயணம் செய்பவர்கள், கூகுள் பே (Google Pay) எனும் மோட் மூலம் பணம் செலுத்தலாம்.

உபெர் இந்திய வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Google Pay மூலம் எப்படி பணம் செலுத்துவது?

உங்கள் மொபைலில் உள்ள உபெர் ஆப்-ல் Payment Method இருக்கிறது அல்லவா.. அதில், Google Pay ஆப்ஷனை நீங்கள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு கூகுள் பே UPI ID-ஐ பதிவிட வேண்டும்.

ஆண்ட்ராய்ட் மொபைல் பயனாளர்களால் மட்டுமே இந்த வசதியை இப்போது பெற முடியும், iOS போன்ற மற்ற தளத்திற்கு இந்த வசதியை விரிவுப்படுத்த கூகுள் திட்டமிட்டு வருகிறது.

 

இந்த கூகுள் பே திட்டத்திற்காக, இந்தியாவில் வரும் தீபாவளிக்குள் 15,000 ஸ்டோர்களை திறக்க கூகுள் முடிவு செய்திருக்கிறது. (அடேங்கப்பா… தீயா திறக்குறாய்ங்க போல!)

அதுமட்டுமின்றி, கூகுள் பே மூலம் ஃபெடரல் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Google pay for your uber india ride