கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன் பே உள்ளிட்ட ஆப்கள் இந்த செல்ஃப் டிரான்ஸ்பர் வசதியை வழங்குகிறது. ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்ற இந்த ஆப்ஷன் உதவும்.
இதை செய்ய பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை கூகுள் பே கணக்குடன் இணைக்க வேண்டும்.
கூகுள் பே-ல் செல்ஃப் டிரான்ஸ்பர் செய்ய,
முதலில் கூகுள் பே ஆப் ஓபன் செய்யவும்.
2. அடுத்து கூகுள் பே -ல் உள்ள பல்வேறு ஆப்ஷன்களை செல்ஃப் டிரான்ஸ்பர் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. இப்போது, நீங்கள் பணத்தை மாற்ற விரும்பும் இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
4. நீங்கள் முதலில் செலக்ட் செய்ய ஒரு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு மற்றொரு வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.
5. இப்போது நீங்கள் டிரான்ஸ்பர் செய்ய வேண்டிய தொகையை என்டர் செய்யவும். பின் நம்பர் கொடுத்தப் பின் உங்களுடைய மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“