நாட்டின் இரண்டாவது பெரிய யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தளமான கூகுள் பே, யூபிஐ லைட் கட்டணத்திற்கான ஆதரவை அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பின்நம்பர் குறிப்பிடாமல் சிறிய கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கிறது. UPI லைட் தொழில்நுட்பம், வழக்கமான UPI பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது கட்டணங்களை வேகமாகவும், வெற்றிகரமாகவும் செலுத்த முடியும். பீக் ஹவர்களிலும் கட்டணங்களை வேகமாகவும், வெற்றிகரமாகவும் செலுத்த முடியும்.
Google Pay ஏற்கனவே உள்ள பயனர்கள் அதே பயன்பாட்டில் UPI லைட் வாலட்டை உருவாக்க அனுமதிக்கிறது. ரூ.2,000 வரை மட்டுமே கட்டணங்களை லோட் செய்து வைக்க முடியும். ஒரு நாளில் இரண்டு முறை ரூ.2,000 என மொத்தம் ரூ. 4000 வரை லோட் செய்து பரிவர்த்தனை செய்யலாம். அதில் ரூ.200 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு பின்நம்பர் செலுத்த தேவையில்லை. சிறிய அளவிலான மதிப்புள்ள பரிவர்த்தனைகளை அதிகரிக்க Google Pay UPI லைட்டை அறிமுகப்படுத்துகிறது.
Google Payயில் UPI லைட்டை எவ்வாறு அமைப்பது?
Play Store அல்லது App Store இலிருந்து Google Pay பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அல்லது புதுப்பிக்கலாம்.
கூகுள் பே ப்ரொவைல் பக்கம் செலுத்தவும்.
setup payment methods செலக்ட் செய்து UPI லைட் செலக்ட் செய்யவும்.
continue கிளிக் செய்து ரூ.2000 வரை கட்டணம் செலுத்தலாம்.
யு.பி.ஐ லைட் மூலம் பணம் செலுத்த யு.பி.ஐ லைட் அக்கவுண்ட்டை செலக்ட் செய்து பின் ப்ரீ பே என்பதை குறிப்பிடவும்.
அவ்வளவு தான் இப்போது யு.பி.ஐ லைட் மூலம் பணம் செலுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“