Google Pay: கூகுள் பே என்று அழைக்கப்படும் ஜி பே பணப்பரிவர்த்தனை செயலி ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ரூபாய் வரை convenience fees வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பே டி.எம் மற்றும் போன்பே போன்ற பிற செயலிகள் ஏற்கனவே கூடுதல் கட்டணம் convenience fees வசூலிக்கப்படும் நிலையில், கூகுள் பே மொபைல் ரீசார்ஜ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காததால் இந்த செயலி பலராலும் விரும்பப்பட்டது.
கூகுள் பே புதிய convenience fees குறித்து டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தனது X பக்கத்தில் கூறுகையில், கூகுள் பேயின் சமீபத்திய மாற்றத்தைப் பற்றி கூறினார். அதில், ரூ.100 முதல் ரூ.200 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை.
இருப்பினும், ரூ.101- 200 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம். ரூ.201- 300 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.2 மற்றும் ரூ. 300க்கும் அதிகமான ரீசார்ஜ் திட்டத்திற்கு ரூ.3 convenience fees ஆக வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
எனினும் இந்த கட்டண வசதி இன்னும் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. கூகுள் பே நிறுவனமும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், கூகுள் பே நிறுவனத்தின் மற்ற சேவைகள்
மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற பிற பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
கூகுள் அதிகாரப்பூர்வமாக புதிய வசதிக் கட்டணங்களை அறிவிக்கவில்லை என்றாலும், தொழில்நுட்ப நிறுவனம் அண்மையில் கடந்த நவம்பர் 10-ம் தேதி Terms of Service விதிமுறைகளை மாற்றியமைத்தது. இது ரீசார்ஜ் கட்டணங்களுக்கு என 'கூகுள் ஃபீஸ்' என்ற புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“